search-icon-img
featured-img

துலாம்

Published :

(சித்திரை 3 4 ஆம் பாதம், சுவாதி, விசாகம் 1 2 3 ம் பாதம்)

என்றும் நிலைத்தடுமாறாத துலா ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு 9ல் சஞ்சரித்து எல்லா வகையிலும் நல்ல மாற்றமும் முன்னேற்றமும், எடுக்கும் முயற்சியில் வெற்றியும், தெய்வ அனுகூலமும், அதிர்ஷ்ட வாய்ப்புகளும், தந்தையால் அனுகூலமும், வெளிநாட்டு தொடர்பான ஆதாயமும் தந்த குரு பகவான் தற்போது உங்கள் ராசிக்கு 10ல் சஞ்சரிப்பதால் பெற்றோர்கள் உடல் நிலையில் கவனம் தேவை. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எந்த விஷயத்தையும் நாசுக்காக கையாளுங்கள். சில நேரங்களில் சிலருக்கு விரும்பத்தகாத காரியங்கள் நடக்கலாம். உங்கள் தகுதிக்கு குறைவான பணிகளை செய்ய நீங்க நிர்பந்திக்கப்படலாம். பொறுமை நிதானம் விழிப்புணர்வு அவசியம். எதிலும் தாமதத்தை தவிர்க்கவும்.குரு பகவான் தனது 5ம் பார்வையால் 2ம் வீட்டை பார்ப்பதால் பொருளாதார நிலையில் உயர்வு உண்டாகும். குரு பகவான் 7ம் பார்வையால் 4ம் வீட்டை பார்ப்பதால் சொத்து வீடு வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும். குரு பகவான் 9ம் பார்வையால் 6ம் வீட்டை பார்ப்பதால் அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. புதிய வியாபாரம் முயற்சிகள் தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகள் மற்றும் பணியாட்களை கவனமாக கையாளுங்கள்.உத்யோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் அதிக கவனம் தேவை. தேவையற்ற நட்பில் இருந்து விலகி இருங்கள். அன்றைய பாடங்களை அன்றே படிப்பது நல்லது.கலைத்துறையினருக்கு தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். புதிய வாய்ப்புகள் தாமதம் ஆகலாம். சம்பள விகிதத்தில் கவனம் தேவை.

பரிகாரம்: திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமியை வெள்ளிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.