search-icon-img
featured-img

மீனம்

Published :

(பூரட்டாதி 4 ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

எப்போதும் எல்லோரிடமும் மகிழ்ச்சியை மட்டும் பகிர்ந்து கொள்ளும் மீன ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு 4ல் அர்த்தாஷ்டம குருவாக சஞ்சரித்த குரு பகவான் தாய் உடல்நிலையில் பாதிப்பு, தாய் மற்றும் உறவுகளால் மனக்கசப்புகள், வீடு வாகனம் சொத்து தொடர்பான பிரச்னைகள், எடுக்கும் முயற்சியில் தடை, வாகன பயணங்களில் சிறுசிறு விபத்துக்கள் தந்த குரு பகவான் தற்போது உங்கள் ராசிக்கு 5ல் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த தடைகள் நீங்கும். எல்லா வகையிலும் நல்ல மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். ஷேர் மார்க்கெட்டில் லாபம் அதிகரிக்கும். தெய்வ அனுகூலம் உண்டு. அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.குரு பகவான் தனது 5ம் பார்வையால் 9ஐ பார்ப்பதால் புகழ் தேடி வரும். குருபகவான் 7ம் பார்வையால் 11ஐ பார்ப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். குரு பகவான் தனது 9ம் பார்வையால் ராசியை பார்ப்பதால் சிந்தனைத் தெளிவு பெறும்.வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. புதிய வியாபார முயற்சிகள் கைகூடும். கூட்டாளிகள் மற்றும் பணியாட்களால் ஆதாயம் உண்டு.உத்யோகஸ்தர்களுக்கு. உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு தேடி வரும். செல்வாக்கு அதிகரிக்கும்.மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைப்பார்கள். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள்.கலைத்துறையினருக்கு தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும். சம்பள விகிதம் உயரும்.

பரிகாரம்: திருச்செந்தூர் முருகப்பெருமானை வியாழக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.