search-icon-img
featured-img

தனுசு

Published :

(மூலம், பூராடம், உத்திராடம் 1 ம் பாதம்)

நல்லவனுக்கு நல்லவனாகவும், வல்லவனுக்கு வல்லவனாகவும் தனுசு ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு 7ல் சஞ்சரித்து எல்லா வகையிலும் நல்ல மாற்றமும் முன்னேற்றமும், எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளையும், பொருளாதாரத்தில் மேன்மையும் தந்த குரு பகவான் தற்போது உங்கள் ராசிக்கு 8ல் அஷ்டமகுருவாக சஞ்சரிப்பதால் எதிலும் கவனம் தேவை. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எந்த விஷயத்தையும் நாசுக்காக கையாளுங்கள். வாகன பயணங்களில் கவனம் தேவை. இரவு நேர பயணங்கள் மற்றும் நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. அவசர முடிவுகளை தவிர்க்க வேண்டியது அவசியம். எதிலும் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. வீண் வம்பு வழக்குகள் வர வாய்ப்புள்ளதால் கவனமுடன் செயல்படுங்கள். எதிர்பாராத அதிர்ஷ்டமும் உண்டு.குரு பகவான் 5ம் பார்வையால் 12ஐ பார்ப்பதால் சுப விரயங்கள் ஏற்படும். குரு பகவான் 7ம் பார்வையால் 2ஐ பார்ப்பதால் எதிர்பாராத பண வரவு உண்டு. குரு பகவான் 9ம் பார்வையால் 4ஐ பார்ப்பதால் புதிய சொத்து வாங்குவதற்கான முயற்சிகள் ஈடேறும்.வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. புதிய வியாபார முயற்சிகளை தவிர்ப்பது நல்லது கூட்டாளிகள் மற்றும் பணியாட்களை கவனமாக கையாளுங்கள்.உத்யோகஸ்தர்கள் உயர் அதிகாரிகள் மற்றும் சமூக ஊழியர்களை அனுசரித்துச் செல்லுங்கள். பதவி உயர்வு, ஊதிய உயர்வு தாமதமாகும். பொறுமை நிதானம் அவசியம்.மாணவர்களுக்கு கல்வியில் அதிக கவனம் தேவை. தேவையற்ற நட்பில் இருந்து விலகிருங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.கலைத்துறையினருக்கு தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள். புதிய வாய்ப்புகள் தாமதமாகலாம். சம்பள விகிதத்தில் கவனம் தேவை.

பரிகாரம்: குருபகவானை செவ்வாய்கிழமையில் சென்று வணங்க நன்மை தரும்.