search-icon-img
featured-img

விருச்சிகம்

Published :

(விசாகம் 4 ம் பாதம், அனுஷம், கேட்டை)

ஆழ்ந்த அறிவும் ஆராய்ச்சி திறனும் உடைய விருச்சிக ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு 8ல் சஞ்சரித்து எடுக்கும் முயற்சிகளில் தடைகள், தீராத பிரச்னைகள், உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு, மறைமுக எதிர்ப்புகள், சிறு சிறு விபத்துக்கள், காரிய தடை, மற்றவர்களால் தொந்தரவுகள், பண இழப்பு தந்த குரு பகவான் தற்போது உங்கள் ராசிக்கு 9ல் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த தடைகள் பிரச்னைகள் அனைத்தும் நீங்கும். எல்லா வகையிலும் நல்ல மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தந்தையால் அனுகூலமான பலன்களை ஏற்படும். எதிலும் முன்னேற்றம் உண்டு. வெளிநாட்டு தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். தெய்வம் அனுகூலம் உண்டு. அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.குரு பகவான் தனது 5ம் பார்வையால் ராசியை பார்ப்பதால் மனம் தெளிவு பெறும். குரு பகவான் 7ம் பார்வையால் 3ம் வீட்டை பார்ப்பதால் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். குரு பகவான் 9ம் பார்வையாக 5ம் வீட்டைப் பார்ப்பதால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. புதிய வியாபாரம் முயற்சிகள் கைகூடும். கூட்டாளிகள் மற்றும் பணியாட்களால் ஆதாயம் உண்டு.உத்யோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும். பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு உண்டு.மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் கைக்கூடும். ஆசிரியர் மற்றும் பெற்றோர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.கலைத்துறையினருக்கு தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும். சம்பள விகிதம் உயரும்.

பரிகாரம்: தர்மபுரி அருகே அதியமான் கோட்டையில் உள்ள சொர்ண கர்சன பைரவரை செவ்வாய்க்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.