(கார்த்திகை 3 4 ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1 2 ம் பாதம்)
பொறுமையே பெருமை தரும் என்பதை உணர்ந்து செயல்படும் ரிஷப ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு 2ல் சஞ்சரித்து குடும்பத்தில் மகிழ்ச்சி, பொருளாதார நிலையில் உயர்வு, பணப்புழக்கம், எடுக்கும் காரியங்களில் வெற்றி, சமூக அந்தஸ்து தந்த குரு பகவான் தற்போது உங்கள் ராசிக்கு 3ல் சஞ்சரிப்பதால் உடன்பிறப்புகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளும், தாமதங்களும் உண்டாகும். எதிர்காலம் பற்றிய பயம் வந்து நீங்கும். விடாமுயற்சி ஒன்றே மிகப்பெரிய வெற்றியை தரும் என்பதை உணர்ந்து கொள்ளும் காலமாக இருக்கும். தைரியத்தையும், தன்னம்பிக்கையும் வளர்த்துக் கொள்ளுங்கள். பயணங்களின் போது தங்க நகை ஆபரணங்களை கவனமாக கையாளுங்கள். எதிலும் பொறுமை நிதானம் விழிப்புணர்வு அவசியம். குரு பகவான் 5ம் பார்வையாக 7ம் வீட்டை பார்ப்பதால் திருமண முயற்சிகள் கைகூடும். கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குரு பகவான் 9ம் வீட்டை 7ம் பார்வையால் பார்ப்பதால் தந்தையால் மகிழ்ச்சி உண்டு. வெளிநாட்டு தொடர்பான விஷயங்கள் சாதகமாக மாறும். குரு பகவான் 11ம் வீட்டை 9ம் பார்வையாக பார்ப்பதால் நீண்ட நாள் ஆசைகள், கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும்.வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் லாபம் உண்டு. புதிய வியாபார முயற்சிகள் கைகூடும். கூட்டாளிகள் மற்றும் பணியாட்களால் ஆதாயம் உண்டு.உத்யோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு தேடி வரும்.மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். தேவையற்ற நட்பில் இருந்து விலகி இருங்கள். ஆசிரியர் மற்றும் பெற்றோர் சொல் கேட்டு நடப்பது நன்மை தரும்.கலைத்துறையினருக்கு தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
பரிகாரம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வெள்ளிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.


