search-icon-img
featured-img

கன்னி

Published :

(உத்திரம் 2,3,4 ம், அஸ்தம், சித்திரை 1,2 ம் பாதம்)

எந்த சூழ்நிலையும் தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் கன்னி ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு 10ல் சஞ்சரித்து தொழில் மற்றும் உத்யோகத்தில் பிரச்னைகளை, நிரந்தரமற்ற நிலை, விரும்பத்தகாத இடமாற்றம், சுய கவுரவக் குறைவு, மனக்கலக்கம், நிலையற்ற தன்மை தந்த குரு பகவான் தற்போது உங்கள் ராசிக்கு 11ல் இருப்பதால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறுதல், எடுக்கும் முயற்சிகள் வெற்றி, நண்பர்களால் ஆதாயம், பொருளாதார நிலையில் உயர்வு, பெரும் லாபம், மக்களிடையே பிரபலம் ஆகியன தர உள்ளார். குரு பகவான் 5ம் பார்வையாக 3ம் வீட்டைப் பார்ப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். குரு பகவான் 7ம் பார்வையாக 5ம் வீட்டைப் பார்ப்பதால் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குரு பகவான் 9ம் பார்வையாக 7ம் வீட்டை பார்ப்பதால் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு.வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. புதிய வியாபாரம் முயற்சிகள் கைக்கூடும். இருப்பினும் கூட்டாளிகள் மற்றும் பணியாட்களை கவனமாக கையாள்வது நல்லது.உத்யோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தடைபட்ட பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வந்து சேரும்.மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைப்பார்கள். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். தற்போதுள்ள வாய்ப்புகளால் லாபம் உண்டு. சம்பள விகிதம் உயரும்.

பரிகாரம்: விழுப்புரம் அருகே உள்ள சிங்கிரி கோவில் கோர நரசிம்மரை புதன்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.