(மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3ம் பாதம் வரை)
குடும்பம்: பாக்கிய ஸ்தானத்தில் ராகுவும், கேதுவும் இணைந்துள்ள இத்தருணத்தில், குரு பகவானும், ஜென்ம ராசிக்கு மாறுவது, உத்தியோகம் காரணமாகவோ அல்லது குடும்பப் பிரச்னைகள் காரணமாகவோ, கணவர் – மனைவி தற்காலிகமாகப் பிரிந்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. பண விஷயங்களில் கவனமாக இருத்தல் வேண்டும். திட்டமிட்டு செலவு செய்தல் மிகவும் அவசியம். நெருங்கிய உறவினர்களிடையே வீண் வாக்குவாதமும், பகையுணர்ச்சியும் மேலிடும். கூடியவரையில் ஒருவரையொருவர் அனுசரித்து நடந்துகொள்வது, குடும்பத்திற்கு நன்மை செய்யும். புரட்டாசி 22, (8-10-2025) மீன ராசிக்கு, சனி பகவான் மாறுவது குடும்பத்தில் ஏற்பட்டுள்ள பல பிரச்னைகள் நல்லபடி தீரும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. மார்கழி 6-ந் தேதி (21-12-2025) குரு பகவான், வக்கிர கதியில் மீண்டும் மிதுன ராசிக்குத் திரும்பினாலும், தமிழ்ப் புத்தாண்டு முடியும் வரை, நன்மைகளையே செய்வார். ஏனெனில், ஜோதிடக் கலையின் துல்லிய விதிகளின்படி, அதிச்சார, வக்கிர கதிகளில் குருவுக்கு பூர்வ ராசி பலனேயாகும். ஏனெனில், அதிச்சார, வக்கிர கதிகள், குரு பகவானைப் பாதிக்காது (ஆதாரம்: “பிருஹத் ஸம்ஹிதை” மற்றும் “பூர்வ பாராசர்யம்”, “உத்தர காலம்ருதம்” ஆகிய புராதன ேஜாதிட நூல்கள்).
உத்தியோகம்: இத்தமிழ்ப் புத்தாண்டு முழுவதும், உத்தியோகத் துறைக்கு நேரிடையான தொடர்பு கொண்டுள்ள சனி பகவானும், ராகுவும் பாக்கிய ஸ்தானத்தில் நிலைகொண்டுள்ளனர். சனி பகவான் மட்டும் மாசி 22-ந் தேதி (6-3-2026) மீன ராசிக்கு மாறிவிடுகிறார். இருப்பினும், இவ்வாண்டு முழுவதும், சனி மற்றும் ராகுவினால் நன்மைகளே ஏற்படும். கொடுப்பதில் கர்ணன் என்றாலும், வேலை வாங்குவதிலும், சனி பகவானும், ராகுவும் சற்று கடுமையானவர்களே! ஆதலால், இவ்வாண்டு முழுவதும், வேலைச் சுமையும், பொறுப்புகளும் சக்திக்கு மீறியே இருக்கும். பல தருணங்களில், வெறுப்பும் விரக்தியும் மேலிடும். பொறுமை அவசியம்.
தொழில், வியாபாரம்: வர்த்தகத் துறைகள் அனைத்தும் சனி பகவானின் ஆதிக்கத்தில்தான் உள்ளது என ஜோதிடக் கலை அறுதியிட்டுக் கூறுகிறது. பாக்கிய ஸ்தானத்தில், மற்றொரு வீரியம் நிறைந்த ராகுவுடன் சேர்க்கை ஏற்பட்டுள்ளதால், வியாபார அபிவிருத்திக்காக, கடுமையாக உழைக்க நேரிடும். குடும்ப நலனைக் கூட பாராது, அடிக்கடி வெளியூர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பயணிக்க வேண்டியிருக்கும். வேலை வாங்கினாலும், கூலி கொடுக்கத் தயங்காதவர் சனி பகவான். ராகுவும் அவ்விதமே! பலன்களைக் கூறும்போது, ராகுவையும், ஒரு சனிக் கிரகமாகவே பாவிக்க வேண்டும் எனக் கூறுகிறது. ஜோதிடப் பாரிஜாதம் எனும் புராதன ஜோதிடக் கிரந்தம். மாசி 22-ம் தேதி (6-3-2026) அன்று சனி பகவான் மீன ராசிக்கு மாறுகிறார். மீனம், மிதுன ராசியினருக்கு, ஜீவனஸ்தானமாகும். இந்தச் சனி மாறுதல், சிறந்த வர்த்தக முன்னேற்றத்தையும், லாபத்தையும், அபிவிருத்தியையும் உறுதிசெய்கிறது.
கலைத் துறையினர்: கிரக நிலைகள் பெரும்பாலும் உங்களுக்கு அனுகூலமாகவே சஞ்சரிக்கின்றனர். வருமானம் திருப்திகரமாகவே இருக்கும் என்பதை கிரகங்கள் உறுதிசெய்கின்றன. பலருக்கு, வெளிநாடு சென்று, அங்கு கலைநிகழ்்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பும், அவற்றின் காரணமாக, வருமான உயர்வும், புதிய தொடர்புகளும் லாபகரமாக இருக்கும்.
அரசியல் துறையினர்: அரசியல் துறை, சுக்கிரன், செவ்வாய் மற்றும் சனி ஆகிய மூன்று கிரகங்களின் ஆதிக்கத்தில் இருப்பதாக, அர்த்த சாஸ்திரமும், பிருஹத் ஸம்ஹிதையும் கூறுகின்றன. கும்ப ராசியில் உள்ள சனிக்கு மற்றும் ராகுவிற்கு சித்திரை 28-ந் தேதியிலிருந்து (11-5-2025) குரு பகவான் பார்வை கிடைக்கிறது. செல்வாக்கு மிகுந்த மற்றொரு கட்சியிடமிருந்து அழைப்பு வரும். அக்கட்சியுடன் சேருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதன் மூலம் உயர் பதவியொன்றும் கிடைக்கவுள்ளது என்பதையும் கிரக நிலைகள் உறுதியுடன் எடுத்துக்காட்டுகின்றன. இந்தச் சுபபலம் 2026 பங்குனி முடியும் வரை உள்ளது.
மாணவ – மாணவியர்: சித்திரை மாதம் 17-ஆம் தேதி (30-4-2025) தேதியிலிருந்து, பங்குனி 22 (5-4-2026) வரையில் கல்விக்கு அதிபதிகளான கிரகங்கள் சிறந்த சுப பலம் பெற்றுத் திகழ்வதால், இந்த ஆண்டு முழுவதும் மாணவ – மாணவியருக்கு, மிகச் சிறந்த கல்வி முன்னேற்றத்தை அளிக்கவுள்ளது. பல இளைஞர்களுக்கும், பெண்மணிகளுக்கும் நேர்முகத் தேர்வுகளின்மூலம், மிக நல்ல வேலை கிடைக்கும் என்பதையும் ஜீவனஸ்தான கிரக நிலைகள் உறுதிசெய்கின்றன.
விவசாயத் துறையினர்: செவ்வாய் மட்்டுமின்றி, விவசாயத் துறையுடன் தொடர்புகொண்டுள்ள முக்கிய கிரகங்களும் சுப பலம் பெற்று வலம் வருகின்றன. இவ்வாண்டு முழுவதும். தேவையான அளவிற்கு மழை பொழியும். அடிப்படை வசதிகளுக்குக் குறைவிராது. கால் நடைகள் நல்ல அபிவிருத்தியை அடையும். ஜனன கால கிரக நிலைகள் சுப பலம் பெற்றிருந்தால், உங்கள் விளைபொருட்களுக்கு வெளிநாடுகளின் சந்தைகளிலிருந்து ஆர்டர்கள் கிடைக்கும். உங்கள் பொருளாதாரத்தையே இவை மாற்றியமைக்கும் என்பதை கிரக நிலைகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன.
அறிவுரை: பெரும்பான்மையான கிரகங்கள் இவ்வாண்டு முழுவதும் உங்களுக்குச் சாதகமாக சஞ்சரிக்கின்றனர். கிரகங்கள் கொடுப்பதை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். விரயம் செய்து விட வேண்டாம்.
பரிகாரம்: ஜென்ம ராசியில், குரு பகவான் சஞ்சரிப்பதால், பரிகாரம் செய்வது நல்லது. தினமும் ÿகந்தர் சஷ்டி கவசம், அபிராமி அந்தாதி, மீனாட்சி பஞ்சரத்னம், ÿவிஷ்ணு சகஸ்ர நாமம், ÿநரசிம்ம பிரபத்தி ஸ்லோகம் ஆகியவற்றை தினமும் சொல்லி வந்தால் போதும். நல்ல பலன் கிடைக்கும்.