மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் வரை
குடும்பம்: ராசி நாதனாகிய குரு பகவான், அனுகூலமற்ற நிலையில் சஞ்சரிக்கும் நிலையில், விசுவாவசு தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது! கீர்த்தி ஸ்தானத்தில், அமர்ந்துள்ள சனி பகவானுடன் ராகு சித்திரை 13-ஆம் (26-4-2025) தேதி இணைவது, மிக நல்ல கிரக மாறுதலாகும்! ருண, ேராக, சத்ரு ஸ்தானத்தில், குரு அமர்ந்திருப்பதால், பழைய கடன்கள் கவலையை அளிக்கும். அடிக்கடி ஏதாவதொரு உடல் உபாதை ஏற்பட்டு, எளிய சிகிச்சையினால் குணம் கிடைக்கும். நெருங்கிய உறவினர்களிடையே சிறு, சிறு கருத்துவேற்றுமையும், தேவையற்ற விவாதங்களும் ஏற்பட்டு, மன நிம்மதி குறையும். வருமானத்தைவிட, செலவுகளே அதிகமாக இருக்கும். சித்திரை 28-ஆம் (11-5-2025) தேதி குரு பகவான், மிதுன ராசிக்கு மாறுவதால், நிதிப் பற்றாக்குறை படிப்படியாக நீங்கி, விசுவாவசு வருடத்தின், பங்குனி மாதத்திலிருந்து நிதிநிலைமை திருப்திகரமாக நீடிக்கும். திருமண முயற்சிகளில் நல்ல வரன் அமைவது, சற்று கடினம். தசா, புக்திகள் அனுகூலமற்று இருப்பின், சிலர் புதிய கடன்களை ஏற்க வேண்டிவரும். கூடியவரையில், தவிர்ப்பது எதிர்காலத்திற்கு நல்லது.
உத்தியோகம்: சித்திரை 13-ல் (26-4-2025) ஏற்படும், ராகு – சனி சேர்க்கை உத்தியோகத் துறை அன்பர்களுக்கு இப்புத்தாண்டு முழுவதும் யோக பலன்களை அளிக்கக்கூடிய கிரக நிலையாகும். மேலதிகாரிகளின் ஆதரவும், சக-ஊழியர்களின் ஒத்துழைப்பும் அன்றாடப் பணிகளில் உற்சாகத்தை ஏற்படுத்தும். பலருக்கு, ஊதிய உயர்வும், பதவியுயர்வையும் எதிர்பார்க்கலாம். வெளிநாடு செல்ல ஆர்வமிருப்பின், இப்போது முயற்சிக்கலாம்.
தொழில், வியாபாரம்: வர்த்தகத் துறை, சனி பகவானின் கையில்தான் உள்ளது! இருப்பினும், செவ்வாய், ராகு, சுக்கிரன் ஆகியோருக்கும் வியாபாரத் துறையுடன் தொடர்பு உண்டு. இவையனைவரும், இத் தமிழ் புத்தாண்டு முழுவதும் சுப பலம் பெற்றிருப்பதால், தொழில் துறையினருக்கு, விசுவாவசு தமிழ்ப் புத்தாண்டு, ஓர் அரிய வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்! புதிய கிளைகள் திறப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. சந்தை நிலவரம் உதவிகரமாக அமையும். நிதிநிறுவனங்கள் ஒத்துழைக்கும். சகக் கூட்டாளிகள் ஒற்றுமையுடன் பணியாற்றுவார்கள்.
கலைத் துறையினர்: ஐப்பசி மாதம் முடியும் வரையில், கலைத் துறைக்கு அதிகாரம் கொண்ட கிரகங்கள் அனுகூலமாக சஞ்சரிக்கின்றனர். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். மக்களிடையே செல்வாக்கும், புகழும் அதிகரிக்கும். வருமானம் உயரும். சினிமாத் துறையினருக்கு, புத்துயிர் அளிக்கும் புத்தாண்டு இது என்பதை சம்பந்தப்பட்ட கிரக சஞ்சார நிலைகள் உறுதியளிக்கின்றன. திரைப்படத் தயாரிப்பாளர்கள், சமூகப் பிரச்னைகள், சரித்திரப் பின்னணி ஆகியவற்றை பின்னணியாகக் கொண்ட திரைப்படங்களை தயாரிப்பது, லாபகரமாக இருக்கும். இப்புத்தாண்டு முழுவதும், நிதிப் பற்றாக்குறை இருப்பதற்கு வாய்ப்பில்லை.
அரசியல் துறையினர்: சுக்கிரன் உள்ளிட்ட அனைத்து கிரகங்களும், உங்களுக்கு ஆதரவாக நிலைகொண்டுள்ளனர். வருடம் முழுவதும் ராகு உங்கள் பக்கம்தான்!! அரசியல் துறையுடன் ராகுவிற்கு நெருங்கிய தொடர்பு உள்ளதை சாணக்கியரின், “அர்த்த சாஸ்திரம்” விளக்கியுள்ளது. செல்வாக்கு நிறைந்த, மிகப் பெரிய அரசியல் கட்சியிலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும். அழைப்பை ஏற்றுக் கொள்வது, உங்கள் எதிர்காலத்திற்கு நன்மை செய்யும்.
மாணவ – மாணவியர்: சித்திரை மாதம் முதல், ஐப்பசி மாதம் முடியும் வரையில், கல்விக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள கிரகங்கள் அனுகூலமாக உள்ளன. படிப்பில் ஆர்வம் மேலிடும். ஆசிரியர்களின் ஆதரவும், வழிகாட்டுதல்களும் படிப்பில் உற்சாகத்தை அதிகரிக்கும். கார்த்திகை மாதம் முதல், பங்குனி முடியும் வரை, சிறு, சிறு உடல்் உபாதைகள், மன சஞ்சலங்களும், கல்வி முன்னேற்றத்தைத் தடைசெய்யும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
விவசாயத் துறையினர்: ஐப்பசி மாதம் முடியும் வரையில், கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால், தண்ணீர் வசதி குறைவில்லாமல் கிடைக்கும். உைழப்பிற்கேற்ற விளைச்சலும் கிடைப்பது, மகிழ்ச்சியை அளிக்கும். வயல் பணிகளில் உற்சாகத்தையளிக்கும். கால் நடைகளின் பராமரிப்பில் அதிக பணம் விரயமாகும். நவீன விவசாய வசதிகள் கிடைக்க வாய்ப்புள்ளதையும் கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.
பெண்மணிகள்: சித்திரை 28-ம் (11-5-2025) தேதியிலிருந்து, பங்குனி 30-ம் (13-4-2026) தேதி வரையில் குரு பகவான் உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிக்கின்றார்! சுக்கிரனும் அனுகூல நிலைகளில் வலம் வருகிறார். ஆதலால், விசுவாவசு தமிழ் புத்தாண்டில், தனுசு ராசியில் பிறந்துள்ள பெண்மணிகளுக்கு பெரும்பாலும், நன்மைகளே அதிகமாக இருக்கும் என்பதை கிரக நிலைகள் உறுதிசெய்கின்றன. திருமணமான பெண்மணிகள் கருத்தரிக்க உகந்த வருடமிது! பல திருமணமான பெண்மணிகளுக்கு, இத்தமிழ் புத்தாண்டில், புத்திர பாக்கியம் கிட்டும் என கிரக நிலைகள் உறுதிசெய்கின்றன. பெண்கள் கருத்தரிப்பதற்கு, குரு மற்றும் சுக்கிரன் ஆகிய இரு கிரகங்களுமே சிறந்்த சுப பலம் பெற்றிருக்க வேண்டும் என “ஜோதிட பாரிஜாதம்” எனும் புராதன ஜோதிட கிரந்தம் விளக்கியுள்ளது.
அறிவுரை: ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில், குரு பகவான் அமர்ந்திருப்பதால், ஆேராக்கியத்தில் கவனமாக இருத்தல் அவசியம். தேவையில்லாமல், வெயிலில் வெளியே செல்வதையும் தவிர்க்க வேண்டும். திட்டமிட்டு செலவு செய்தலும் முக்கியம்.
பரிகாரம்: வியாழக்கிழமைகளில், தேவாரம்,திருவாசகம், திவ்யப் பிரபந்தம் ஆகியவற்றை சொல்வது நல்ல பரிகாரமாகும். பெண்மணிகள், அபிராமி, அந்தாதி, மீனாட்சி பஞ்சரத்னம் -படித்து வந்தாலும், கேட்டுவந்தாலும் நல்ல பலன் கிடைப்பதை அனுபவத்தில் காணலாம்.