மேஷம்
மார்ச் 1 முதல் 15 வரைபுது விஷயங்களை புகுத்தும் மேஷ ராசி அன்பர்களே! இந்தக் காலகட்டத்தில் எந்த காரியத்தையும் செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பகைவர்களால் ஏற்படும் சிறு தொல்லைகளை சமாளிக்க வேண்டி இருக்கும். புதிய நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலக பணிகள் மூலம் பதற்றம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. பெண்கள் அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியை பற்றி டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படித்து புரிந்து கொள்வது நல்லது. கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் பலன் தரும். அரசியல்துறையினருக்கு மேலிடத்துடன் வாக்குவாதம் ஏற்படலாம்.
பரிகாரம்: தினமும் ராம நாமம் ஜெபித்து வருவதன் மூலம் எதிர்மறை எண்ணங்கள் மறையும்.