ரிஷபம்
மார்ச் 1 முதல் 15 வரைகொடுத்த வாக்கினை உயிருக்கு சமமாக மதிக்கும் ரிஷப ராசி அன்பர்களே! இந்தக் காலகட்டத்தில் ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும். மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது. வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் சிறிது காலம் தள்ளிப் போடுவது சிறந்தது. குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கலாம். எல்லோரையும் அனுசரித்து செல்வது நன்மை தரும். பெண்களுக்கு மனதடுமாற்றம் இல்லாமல் நிதானமாக செயல்படுவது நன்மைதரும். மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவது பற்றிய கவலை நீங்கும். படிப்பில் ஆர்வம் உண்டாகும். கலைத்துறையினருக்கு வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. அரசியல் துறையினருக்கு எதிர்காலம் தொடர்பாக ஆலோசனைகள் செய்வீர்கள்.
பரிகாரம்: வியாழக்கிழமையன்று அருகிலிருக்கும் சிவன் ஆலயத்திற்குச் சென்று வலம் வருவதன் மூலம் சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.