மிதுனம்
மார்ச் 1 முதல் 15 வரைஅன்பினால் மற்றவர்களை கட்டுப்படுத்தும் மிதுன ராசி அன்பர்களே! இந்தக் காலகட்டத்தில் வீண்செலவுகள் ஏற்படும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். மற்றவர்களின் பிரச்னைகளுக்கு வலிய சென்று உதவிகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. விருப்பம் இல்லாத இடமாற்றம் உண்டாகலாம். தொழில், வியாபாரம் முன்னேற்றம் காண மிகவும் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்தபடி பணிகள் முடியாமல் மனசங்கடத்திற்கு ஆளாக நேரிடும். குடும்பத்தில் இருப்பவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பாடுபடுவீர்கள். பெண்களுக்கு விருப்பம் இல்லாமல் பயணம் செல்ல நேரிடலாம். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்கள் எளிமையாக தோன்றினாலும் கவனத்தை சிதற விடாமல் படிப்பது அவசியம். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த பதவிகள் கிடைக்கும்.
பரிகாரம்: சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்வதால் பிணிகள் நீங்கும். காரியத் தடை, எதிர்ப்புகள் அகலும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும்.