கடகம்
அக்டோபர் 1 முதல் 15 வரைகுடும்பத்தினருக்கு முக்கியத்துவம் அளிக்கும் கடக ராசி அன்பர்களே இந்த காலகட்டத்தில் உடல் அசதி ஏற்படலாம். மனதில் ஏதாவது கவலை இருந்து கொண்டே இருக்கும். திட்டமிட்டு செயலாற்றுவதில் பின்னடைவு ஏற்படலாம். பக்தியில் நாட்டம் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் உறுதியாக இருப்பீர்கள். தொழில் வியாபாரம் தொடர்பான சிக்கல்கள் தீரும். பணவரத்து திருப்திதரும். வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதங்கள் தரும்போது கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு இருப்பது போல் உணர்வார்கள். சக ஊழியர்களுக்கும் உங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் வரலாம். குடும்பத்தில் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளின் படிப்பில் அக்கறை காட்டுவது நல்லது. சுபநிகழ்ச்சிகளுக்கு இருந்து வந்த தடைகள் அகலும். பெண்களுக்கு காரியங்களில் பின்னடைவு ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மெத்தன போக்கு மாறும்.
பரிகாரம்: அங்காள பரமேஸ்வரியை வேப்பிலை கொடுத்து வணங்க பிரச்சனைகள் சுமுகமாக முடியும். மனக்குறை நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள்.