மேஷம்
விருந்தினர் வருகை அதிகரிக்கும். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.