திருக்காட்டுப்பள்ளி: திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள நாகாச்சியில் விநாயகர், சேவராய ஐயனார் மற்றும் பரிவார தெய்வ கோயில்கள் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. திருக்காட்டுப்பள்ளி அருகே நாகாச்சி கிராமத்தில் அமைந்துள்ளது விநாயகர், சேவராய ஐயனார், மதுரைவீரன், அங்காளபரமேஸ்வரி, காமாட்சியம்மன், தீத்தாயி அம்மன், கொங்கலாயிஅம்மன், பெரட்டாயிஅம்மன், பேச்சியம்மன், செல்லாயிஅம்மன், முத்துவைராவி அம்மன், கருப்புசாமி மற்றும் பரிவார தெய்வங்களின் கோயில்கள். இவைகள் அனைத்துக்கும் கும்பாபிஷேகம் நடத்த திருப்பணிகள் செய்யப்பட்டன.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 6ம் தேதி காலை கணபதி ஹோமம், கோபூஜை, கஜபூஜை, மாலை முதல்கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் 2ம் மற்றும் 3ம் கால யாக பூஜைகள் நடந்தன.நேற்று அதிகாலை விசேஷ திரவிய மற்றும் மூலமந்திர ஹோமங்களுடன் 4ம் கால யாக பூஜைகள் முடித்து மஹா பூர்ணாஹூதி செய்து தீபாராதனை நடந்தது.
பின்னர் புதுச்சத்திரம் நாராயணசாமி குழுவினரின் நாதஸ்வர இசை மற்றும் கேரள ஜண்டை மேளம் முழங்க கடங்கள் புறப்பட்டு கோயில் வலம் வந்து விநாயகர் மற்றும் பரிவார தெய்வ கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் சேராய ஐயனார் மற்றும் பரிவார தெய்வ கோயில் விமானங்கள் மற்றும் மூலஸ்தான கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை கிராம காரியஸ்தர்கள், பொதுமக்கள் மற்றும் விழாகுழுவினர் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருக்காட்டுப்பள்ளி போலீசார் செய்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தரு
வீர்கள். பழைய பிரச்சினைகள் தீரும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.