திருப்பூர்: செல்லாண்டியம்மன் கோயில் ஆடிக்குண்டம் திருவிழாவையொட்டி, குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள்
நீண்ட வரிசையில் காத்திருந்து குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். திருப்பூர் மாநகரின் காவல் தெய்வமாக திகழும் செல்லாண்டியம்மன் கோவில், வளம் பாலம் அருகே அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் குண்டம் விழா, 14 நாட்கள் விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு கடந்த 12ம் தேதி கிராமசாந்தி நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 14ம் தேதி பூச்சாட்டு, கணபதி ஹோமம், கொடியேற்றம், சக்தி கரகம் அழைத்தல், மகாமுனி சிறப்பு பூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.
18ம் தேதி கொடியேற்றம், குண்டம் இறங்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டுதல், சக்தி அழைத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து 19ம் தேதி தங்கையின் திருமணத்துக்கு அண்ணன் கொடுக்கும் சீர்வரிசையாக ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில் இருந்து, அம்மனுக்கு சீர் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 20ம் தேதி பி.என்.ரோடு முனியப்பன் கோயிலிலிருந்து சூலம் எடுத்து வரப்பட்டது. அதன்பின், டவுன் மாரியம்மன் கோவிலிலிருந்து பூவோடு எடுத்தல், ஆடி அமாவாசையன்று, கொடுமுடி தீர்த்தம் கொண்டு வந்து சிறப்பு அபிஷேகம் ஆகியன நடந்தது. விழாவையொட்டி மீனாட்சியம்மன், சமயபுரம் மாரியம்மன், அங்காளம்மன், சவுடேஸ்வரி அம்மன் அலங்காரங்களில், அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவில் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நேற்று காலை 9 மணிக்கு துவங்கியது. முதலில் பூசாரி குண்டம் இறங்கினார். அதன்பின், அம்மனுக்கு விரதம் இருந்த பக்தர்கள் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகளுடன் குண்டம் இறங்கினர். குண்டம் இறங்குதலுக்கு பின், அக்னி அபிஷேகம், மாவிளக்கு எடுத்து வருதல், பொங்கல் வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு அபிஷேக அலங்கார பூஜையுடன், 28ம் தேதி குண்டம் விழா நிறைவடைகிறது.
உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தரு
வீர்கள். பழைய பிரச்சினைகள் தீரும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.