திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணி திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆவணி திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வந்தது. திருவிழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தனர். 9ம் நாளான நேற்று முன்தினம் சுவாமி குமரவிடங்கப் பெருமானும், சுவாமி அலைவாயுகந்த பெருமானும் தனித்தனியே வெள்ளி குதிரை வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பாளை சாலையில் உள்ள வேட்டை வெளிமண்டபத்தில் திருக்கண் சாத்திய பிறகு மேலக்கோயிலை சேர்ந்தனர். இரவு 10 மணிக்கு சுவாமி தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா நடந்தது.
விழாவின் சிகரமான தேரோட்ட வைபவம் விமரிசையாக நேற்று காலை நடந்தது. காலை 6.20 மணிக்கு இழுக்கப்பட்ட விநாயகர் தேரை 6.40 மணிக்கு பக்தர்கள் நிலையத்தில் சேர்த்தனர். இதையடுத்து சுவாமி தேரோட்டம் காலை 6.50 மணிக்கும், அம்மன் தேரோட்டம் காலை 7.45 மணிக்கும் நடந்தது. இதில் நெல்லை, தூத்துக்குடி மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர். தேரோட்டத்தில் கோயில் உதவி ஆணையர் அருணாசலம், அலுவலக கண்காணிப்பாளர் யக்ஞ நாராயணன், பேரூராட்சி நிர்வாக அதிகாரி மனோரஞ்சிதம், ஒன்றிய அதிமுக செயலாளர் ராமச்சந்திரன், காயல்பட்டினம் நகர துணைச்செயலாளர் மனோகரன், மாவட்ட காங். செயலாளர் ஜெயந்திநாதன், கோயில் எழுத்தர்கள் பிச்சையா, நேர்முக உதவியாளர் கார்த்திகேயன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட முன்னாள் இயக்குநர் விஜயகுமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இரவு 7.30 மணிக்கு தட்சணமாற நாடார் சங்க மண்டகப்படியில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக அலங்காரத்தைத் தொடர்ந்து சுவாமி குமரவிடங்கப் பெருமானும், அம்பாளும் சிவன் கோயிலை சேர்ந்தனர். பின்னர் அங்கிருந்து பெரிய திருப்பல்லக்குகளில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்தனர். ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், பொறுப்பு இணை ஆணையர் பரஞ்ஜோதி, உள்துறை கண்காணிப்பாளர்கள் ராஜமோகன், பத்மநாபன், மானேஜர் அய்யா பிள்ளை மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தரு
வீர்கள். பழைய பிரச்சினைகள் தீரும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.