தாழையூத்து: நெல்லை ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோயில் திருவாதிரை விழாவின் சிகரமான ஆருத்ரா தரிசனம் விமரிசையாக நடந்தது. விழாவில் பங்கேற்ற பெண்கள் உள்ளிட்ட திரளானோர் தரிசித்தனர். நெல்லை அருகேயுள்ள ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி இந்தாண்டுக்கான திருவிழா, கடந்த மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சதுர்வேத பாராயணம், திருவெம்பாவை பாராயணம், சிறப்பு தீபாராதனை நடந்து வந்தது.
கடந்த 30ம் தேதி அழகிய கூத்தர் சபையில் இருந்து விழா மண்டபத்திற்கு எழுந்தருளும் வைபவம் நடந்தது. பின்னர் காலையில் சுவாமி வெள்ளை சாத்தியும், மாலை பச்சை சாத்தியும் சிறப்பு வழிபாடு நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான திருவாதிரை திருவிழா தேரோட்டம் கடந்த 1ம் தேதி நடந்தது. இதில் நெல்லை மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து நிலையத்தில் சேர்த்தனர். இதைத் தொடர்ந்து 10ம் திருவிழாவான நேற்று விழாவின் சிகரமான ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை 2 மணிக்கு சுவாமிக்கு மஹா அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோ பூஜை முதலான பல்வேறு சிறப்பு வழிபாடுகளும், அதனைத் தொடர்ந்து ஆருத்ரா தரிசனமும் நடந்தது.
இதன்பின்னர் நேற்று பிற்பகல் நடராஜர் திருநடன தீபாராதனை, அழகிய கூத்தர் திருவீதி உலா, பஞ்சமுக அர்ச்சனை நடந்தது. இதில் பெண்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகளுக்காக பாலாலயம் நடத்தப்பட்டுள்ளதால், திருவாதிரை திருவிழாவில் தினமும் சந்தான சபாபதி சன்னதியில் சிறப்பு வழிபாடு நடந்து வந்தது. 10ம் திருவிழாவான நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பெரிய சபாபதி சன்னதி முன் திருவெம்பாவை பாடல் பாடப்பட்டு நடராஜர், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.