பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி அருகே நடந்த கோயில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான அரிவாள்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே முத்துலாபுரம் கிராமத்தில் ஆயிரம் அரிவாள் கோட்டை கருப்பண்ணசாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறினால், சுவாமிக்கு காணிக்கையாக அரிவாள்களை திருவிழா நாளில் செலுத்துகின்றனர். நேற்று நடந்த கோயில் திருவிழாவில் சுவாமிக்கு அணிவிக்க பட்டாடையை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
அதன் பின் மேளதாளம் முழங்க பூசாரி மற்றும் சாமியாடி, அரிவாள்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். இரவு 11 மணிக்கு மேல் ஆயிரக்கணக்கான அரிவாள்களை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச்சென்று கோயிலில் காணிக்கையாக செலுத்தினர். அரிவாள்கள் சுமார் 2 அடி முதல் 16 அடி நீளம் வரை செய்யப்பட்டிருந்தன. கோயில் பரம்பரை பூசாரி ராமசாமி கூறுகையில், ‘கோயிலுக்கு ஆண்டுதோறும் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு காணிக்கையாக வந்த அரிவாள்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது’ என்றார்.
மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். நினைத்தது நிறைவேறும் நாள்.