பாப்பாக்குடி: திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோமதியம்பாள் கோயிலில், ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான திருவிழா, நேற்று தொடங்கியது. காலையில் மகா கணபதி ஹோமம், கும்ப பூஜை, கோ பூஜையுடன் திருக்கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் நாறும்பூநாதர், கோமதியம்பாள் கோயிலை வலம்வந்து காட்சியளித்தனர். தொடர்ந்து வருகிற 31ம் தேதி வரை 11 நாட்கள், திருவிழா நடக்கிறது.
விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் இரவு சுவாமி அம்பாள் வீதிஉலா நடைபெறுகிறது. 7ம் நாளான ஜன.28ம் தேதி சிவப்பு சாத்தியும், 8ம் திருநாளான ஜன.29 பச்சை சாத்தியும் சப்பரபவனி நடக்கிறது. 9ம் திருநாளான ஜன.30ம் தேதி தேரோட்டம், ஜன.31ம் தேதி மதியம் 1 மணிக்கு முக்கிய நிகழ்ச்சியான தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் பரஞ்ஜோதி, நிர்வாக அதிகாரி கனகசுந்தரம், ஆய்வாளர் முருகானந்தம், தக்கார் முருகன் மற்றும் கோயில் பணியாளர்கள், திருப்புடைமருதூர் ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். டென்ஷன் கோபம் யாவும் நீங்கும். கடனாக கொடுத்த பணத்தை திருப்பி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்து முன்னேற்றம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.