தென்காசி: கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கல்லகநாடி முப்புடாதி அம்மன் கோயில் திருவிழாவில் நேற்று தேரோட்டம் நடந்தது. கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கல்லகநாடி முப்புடாதி அம்மன் கோயிலில், தைத்திருவிழா கடந்த 14ம் தேதி தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு தினமும் காலை மற்றும் மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, அம்மன் வீதி உலா மற்றும் கலைநிகழ்ச்சி நடந்து வருகிறது. விழாவில் 9ம் நாளான நேற்று மதியம் தேரோட்டம் நடந்தது.
தேரோட்டத்தை பண்பொழி திருமலைக்குமாரசாமி கோயில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் அருணாசலம், பரமேஸ்வரி அருணாசலம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கேரள செண்டை மேளம் முழங்க தேரை வடம்பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். இதில் கடையநல்லூர், புளியங்குடி, தென்காசி, சிவகிரி, செங்கோட்டை, அச்சன்புதூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்துமாலையில் நிலையம் வந்தடைந்தது. தொடர்ந்து இரவில் வாணவேடிக்கை நடந்தது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
குடும்பத்தினருடன் மனம் விட்டுப்பேசுவீர்கள். வெளிவட்டாரத் தில் அந்தஸ்து உயரும். மற்றவர்கள் மனதை புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப நடந்து கொள்வீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ் கௌரவம் கூடும் நாள்.