திருவிடைமருதூர்: திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கும்பகோணம் அடுத்த திருச்சேறையில் சாரபரமேஸ்வரர் கோயில் உள்ளது. கடன் நிவர்த்தி ஸ்தலமாக விளங்கும் இக்கோயிலில் ஒரே சன்னதியில் சிவதுர்க்கை, விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவ துர்க்கைகள் அருள்பாலித்து வருகின்றனர். தேவார பாடல் பெற்ற பைரவ சன்னதியும் உள்ளது.
இந்த கோயிலில் கும்பாபிஷேக விழா கடந்த 19ம் தேதி துவங்கியது. 20ம் தேதி லட்சுமி ஹோமம், ஆற்றிலிருந்து தீர்த்தம் கொண்டு வருதல் நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில் நேற்று கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. அதிகாலை 5 மணிக்கு யாகசாலை பூஜை, கோபூஜை நடந்தது. பின்னர் கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. இதைதொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நாளில் நான்கு ஐந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். தேவையற்ற வீண் அலைச்சல் ஏற்படும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தமாதமாக வரும். உத்தியோகத்தில் அதிருப்தி உண்டாகும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.