*தெய்வத் திருவருள் பெறுவதற்கு விரதங்கள் பெரிதும் துணை புரிகின்றன. பண்டிகை காலங்களில் வரும் விரதங்களை மேற்கொள்வதன் மூலம் சந்தோஷம் மட்டுமின்றி, மனஅமைதியும் கிடைக்கிறது. இந்த வகையில் தீபாவளி பண்டிகை மிகவும் பிரசித்தமானது. நாடு முழுவதும் வயது வித்தியாசம் இன்றி சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படும் பண்டிகை.
*சாதாரணமாக அமாவாசையில் பல வழிபாடுகள் செய்வது இந்துக்களின் வழக்கம். துலா ராசியில் சூரியன் இருக்கும்போது வரும் அமாவாசையில்தான் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண பரமாத்மாவிடம் நரகாசுரன் கேட்ட வரத்துக்காக அவன் நினைவாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.
*ராவணனை விஜயதசமி நாளில் வதம் செய்த ராமபிரான் வனவாசம் முடிந்து தீபாவளியன்றுதான் அயோத்தி திரும்பியதாக கூறப்படுகிறது. அகிம்சையின் அடையாளமாக விளங்கிய மகாவீரர் நிர்வாணம் அடைந்த நாளும் இதுதான்.நம் மனதில் உள்ள கோபம், அகங்காரம், ஆணவம், பொறாமை போன்ற தீய குணங்கள் எரிந்துபோக வேண்டும் என்பதற்காக எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை உடுத்தி பட்டாசு, வாணவேடிக்கை, வெடி வெடித்து குடும்பத்துடன் உற்றார், உறவினர், நண்பர்களுடன் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொள்வதே இதன் சிறப்பு அம்சம்.
*தீபாவளி அன்று விரதம் முடித்து நோன்பு எடுப்பது முக்கிய நிகழ்வாகும். இந்த நோன்பு பரம்பரை பரம்பரையாக குடும்ப வழக்கப்படி செய்யப்படும் முக்கிய வழிபாடாகும். சிவனுக்குரிய அஷ்ட மகா விரதங்களில் கேதார கவுரி விரதம் மிகவும் முக்கியமானதாகும். சக்தி ரூபமான பார்வதி தேவி சிவனை நினைத்து கடும் தவம் புரிந்து சிவனின் உடம்பில் ஐக்கியமாகி அர்த்தநாரியாக பாதி உடம்பை பெற்ற விரதமாகும்.
இந்த நோன்பு சரியாக ஐப்பசி மாத அமாவாசையில் வருகிறது.
*21 நாட்கள் விரதம் இருந்து தீபாவளி அமாவாசையன்று விரதத்தை பூர்த்தி செய்வார்கள். தற்கால சூழ்நிலையில் அவ்வளவு நாட்கள் யாரும் கடைபிடிப்பதில்லை. தீபாவளிக்கு சில நாட்கள் முன்பு விரதம் இருந்து நோன்பு தொடங்குவார்கள். நோன்பு நிறைவேறும் தீபாவளி நாளில் கும்பம் வைத்து காமாட்சி அம்மன் விளக்கேற்றி பழவகைகள், பூக்கள், தேங்காய், வெற்றிலை பாக்கு இனிப்பு வகைகள் வைத்து படைப்பார்கள். அப்பமும், அதிரசமும்தான் இதில் முக்கிய இனிப்பு வகைகள் ஆகும்.
*21 அப்பம், 21 அதிரசம் வைத்து அதனுடன் நோன்பு கயிற்றையும் வைப்பார்கள். பூஜை முடிந்த பிறகு, வந்திருப்பவர்களுக்கு பிரசாதமும், நோன்புக் கயிறும் கொடுத்து உபசரிப்பார்கள்.பக்தி சிரத்தையுடன் கேதார கவுரி விரதம் இருந்து பூஜை செய்யும் பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி பாக்யமும், சற்புத்திர யோகமும் உண்டு என்பது ஐதீகம்.
*இந்த விரதம் மேற்கொண்டால் கணவன் & மனைவி இடையே மாறாத அன்பு என்னென்றும் நிலைத்திருக்கும். தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும். அன்யோன்யம் அதிகமாகும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள். குடும்பத்தில் அன்பும், மகிழ்ச்சியும் தழைக்கும் என்பது நம்பிக்கை. தீபாவளி நன்னாளில் கேதார கவுரி விரத பூஜை செய்து சகல நலன்களும் மகிழ்ச்சியான வாழ்வும் பெறுவோமாக.
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். புதுமை படைக்கும் நாள்.