அனுமன் ஜெயந்தி : சகல தோஷங்கள் போக்கும் ஆஞ்சநேயர்
அவதாரங்கள் என்று சொல்லும் போது நமக்கு முதலில் நினைவுக்கு வருவது தசாவதாரம். சிவபெருமானும், விஷ்ணுவும் பல்வேறு காரணங்களுக்காக பல அவதார வடிவங்களை எடுத்து இருக்கிறார்கள். அதன்படி தூய்மையான பக்தி, ஞானம், வீரம், விவேகம், போன்றவற்றை எடுத்துக்காட்ட சாட்சாத் சிவபெருமான் எடுத்த அவதாரமே ஆஞ்சநேயர் என்பது சாஸ்திரங்கள் மூலம் தெரிய வருகிறது. மார்கழி மாதம் மூல நட்சத்திரம், தனுசு ராசி, மேஷ லக்னம், அமாவாசை திதியில் அனுமன் அவதாரம் நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது.
அன்றைய தினம் அவர் ஜெயந்தி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. எல்லா விஷ்ணு தலங்களிலும் அஞ்சனை புதல்வனாகிய அனுமனுக்கு தனி சந்நதி இருக்கும். இது தவிர ஆஞ்சநேயருக்கு பிரசித்தி பெற்ற தனிக்கோயில்களும் உள்ளன. தமிழகத்தில் எங்கு நோக்கினும் விநாயகர் கோயில் இருப்பதைப் போல வடஇந்தியாவில் அனுமனுக்கு அதிக ஆலயங்கள் உள்ளன. அனுமன் சர்வ தேவதா சக்திகளின் அம்சம். புத்தி, பலம், கீர்த்தி, தைரியம், மனோபலம் போன்றவற்றை அருளுபவர்.
அனுமனை வரம் அருளும் மூர்த்தி என்று சிறப்பித்துக் கூறுவார்கள். வேண்டியவர்க்கு வேண்டியதை வழங்கும் வரப்பிரசாதி என்பதால் இவருக்கு பிரார்த்தனைகள் நேர்த்திக் கடன்கள், வழிபாடுகள் அதிகம். பஞ்சபூத தத்துவம் சிரஞ்சீவியான அனுமன் வாயு புத்திரன் என்பதால் காற்றை வென்றவர் ஆகிறார். சமுத்திரத்தை ராம நாமம் சொல்லியபடி தாண்டியதால் நீரை வென்றவர் ஆகிறார். பூமி பிராட்டியான சீதா தேவியின் பூரண அருளை பெற்றதால் நிலத்தை வென்றவர் ஆகிறார்.
வாலில் வைத்த அக்னி ஜுவாலையால் இலங்கையை தகனம் செய்ததால் நெருப்பை வென்றவர் ஆகிறார். வானத்தில் நீந்திப் பறக்கும் ஆற்றல் பெற்றதால் ஆகாயத்தை வென்றவர் ஆகிறார். இப்படி பஞ்ச பூதங்களையும் தன் உள்ளடக்கிய ஆஞ்சநேயர் எங்கும், எதிலும் அடங்குவதில்லை. ராமா என்ற இரண்டு எழுத்தில் மட்டும் கட்டுண்டு கிடக்கிறார். தீய சக்திகள், காத்து கருப்பு, பூதபிசாசங்கள், செய்வினை, மனபேதலிப்பு, சகல தோஷ தடைகள் நீங்குவதற்காக பக்தர்கள் ஆஞ்சநேயரை பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள்.
வாஸ்து கோளாறு உள்ள இல்லங்களில் வீட்டின் வாசல்படியில் அனுமன் படம் வைப்பதால் தோஷ கோளாறுகள் நிவர்த்தியாகின்றன. அனுமனை சொல்லின் செல்வன் என சிறப்பித்துக் கூறுவார்கள். இவரை வணங்குவதன் மூலம் சிறந்த பேச்சாளராக ஆக முடியும். ஜோதிடர்களும், புரோகிதர்களும், ஆசிரியர்களும் வழிபடுவதால் நாவன்மை மேலோங்கும். அனுமன் ஜெயந்தியில் அஞ்சேல் என்று ஆசி கூறி அபயம் அளிக்கும் அனுமன் பாதம் பணிவோம். எல்லா தோஷங்கள், தடைகள், தடங்கல்களும் நீங்கி வளமான வாழ்வு பெறுவோம்.
தடைகளை உடைக்கும் வடை மாலை ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி வழிபடுவது விசேஷமானதாகும். கிரக தோஷத்தை நீக்குவதற்காக வடை மாலை சாற்றுவது என்பது காலம் காலமாக இருந்து வரும் வழிபாடாகும். ராகுவுக்கு உரிய உளுந்து, சனிக்கு உரிய எண்ணெயில் செய்த வடையை 108 முதல் 1008 என்ற எண்ணிக்கையில் மாலையாக சாற்றுவதால் கிரக தோஷ தடை விலகுவதாக ஐதீகம். கல்வியில் தடை, சுணக்கம் நீங்க வெற்றிலை மாலை, குடும்ப ஒற்றுமை, பிரிந்த தம்பதியர் சேர தேங்காய் மாலை, தடைகள் நீங்கி உயர் பதவி அடைய துளசி மாலை, தீராத நோய் தீர வெண்ணெய் காப்பு, குழந்தை பாக்யம் கிட்ட சந்தன காப்பும் மிக முக்கியமான பிரார்த்தனை முறைகளாகும்.
- ஜோதிட முரசு, மிதுனம் செல்வம்.
1/2/2014 11:48:51 AM
lamisil 1
lamisil lamisil pastillas
lamisil 1
lamisil lamisil pastillas
lilly coupons for cialis
ismp.org prescription discount coupon
duphaston cijena bez recepta
duphaston forum duphaston tablete za odgodu menstruacije
cialis online coupon
ambito20.it prescription discount coupons
dilation and curettage hysteroscopy
blog.hoomla.se when is it too late to get an abortion
abortion clinics rochester ny
gamefarm.se after morning pill
naltrexone for alcohol cravings
link naltrexone pain management
side effects of naltrexone 50 mg
read what is naltrexone
naltrexone where to buy
link naltrexone drug interactions
naltrexone where to buy
link naltrexone drug interactions
naltrexone alcohol
open implant for opiate addiction
When you say reminds us of the first incarnations of Dasavataram coming .