ஏகாதசிகளில் சிறப்பு பெற்றதும்
வளங்கள், முக்தியை அருள்வதுமான வைகுண்ட ஏகாதசி நாளை கொண்டாடப்படுகிறது.
காலங்களில் வசந்த காலத்தையும், மாதங்களில் மார்கழியையும் சிறப்பித்துக்
கூறுவார்கள். இந்த மார்கழி மாதம் முழுவதும் விரதங்கள், வழிபாடுகள்,
பஜனைகள், கச்சேரிகள், உற்சவங்கள், உபந்யாசங்கள், கதாகாலசேபங்கள், சிறப்பு
சொற்பொழிவுகள், ஆன்மிக யாத்திரைகள் சிறப்பாகவும், விமரிசையாகவும் தொன்று
தொட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மார்கழியில் பாவை நோன்பும்,
வைணவ கோயில்களில் உற்சவங்களும் அதிகம். ஆகையால் இதை இறைவனுக்குரிய மாதமாக
நம் முன்னோர்கள் போற்றி கடைபிடித்தனர். இந்த மாதத்தில் வீட்டில்
சுபவிசேஷங்களை செய்யாமல் அதற்கு அடுத்த மாதமாகிய தை மாதத்துக்கு
முக்கியத்துவம் கொடுத்தனர். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்லி, அந்த
மாதத்தில் சுபகாரியங்களை நடத்தினர்.
மார்கழி மாதத்தை ‘பீத‘ மாதம்
என்று பண்டைக் காலங்களில் அழைத்தனர். பீதம் என்ற சொல்லுக்கு மஞ்சள் என்று
பொருள். மார்கழி மாதத்தில் எங்கும் மஞ்சள் வண்ண பூக்கள் பூத்து மங்களகரமாக
காட்சியளித்ததாலும், மஞ்சள் கிழங்கு இம்மாதத்தில் விளைந்ததாலும் பீத மாதம்
என்று அழைத்தனர். அது நாளடைவில் மருவி பீடை மாதம் என்றாகி விட்டது. மார்கழி
பீடை மாதமல்ல. நம்முடைய பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்க பரந்தாமன்
அருளிய புண்ணிய மாதமாகும்.
இந்து தர்ம சாஸ்திரங்கள், புராணங்களில்
ஏகாதசி விரத மகிமை பற்றி சிறப்பித்து கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்திலும்
வளர்பிறையில் ஒன்றும் தேய்பிறையில் ஒன்றும் என இரண்டு ஏகாதசிகள் வரும்.
ஒவ்வொரு மாத ஏகாதசி விரதத்துக்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சித்திரை மாத ஏகாதசி விரதம் இருந்தால் விரும்பிய பேறு உண்டாகும். வைகாசி -
கயிலாய யாத்திரை மேற்கொண்டு பத்ரிநாத்தை தரிசித்த பலன். ஆனி - சொர்க்கம்
செல்லும் பாக்யம். ஆடி - ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு அன்னதானம் தந்த
புண்ணியம். ஆவணி - மக்கள் செல்வம் உண்டாகும்.
நோய் நொடிகள்
நீங்கும். புரட்டாசி - நிம்மதி கிட்டும். ஐப்பசி - சகல விஷயங்கள்
கூடிவரும். கார்த்திகை - மகிழ்ச்சியான வாழ்வு. தை பித்ருசாபம் நீங்கும்.
மாசி - பாவங்கள், தோஷங்கள் விலகும். பங்குனி - தடைகள் நீங்கி வெற்றிகள்
குவியும். ஏகாதசியன்று விரதம் இருந்து மறுநாள் துவாதசியன்று காலையில் பூஜை
முடித்து சாப்பிடுவார்கள். ஏகாதசிகளில் சிறப்பு பெற்றதும், முக்தியை
தரவல்லதுமாகிய மார்கழி மாத ஏகாதசி வைகுண்ட ஏகாதசி என அ¬ழ்க்கப்படுகிறது.
பாற்கடலில் துயில் கொண்டிருக்கும் பரந்தாமன் விழித்தெழும் காலத்தில் அவனை
தொழுவது சகல நலன்களையும் சேர்க்கும் என்பது ஐதீகம்.
முரன் என்ற
அரக்கனை அழிப்பதற்காக தனது உடலில் இருந்து மோகினியை மகாவிஷ்ணு
தோற்றுவித்தார். முரனை மோகினி சம்ஹரித்த நாளே ஏகாதசி. அன்றைய தினம் தன்னை
வழிபடுபவர்களுக்கு வைகுண்ட பதவி அளிப்பதாக பெருமாள் அருளினார். வைகுண்ட
ஏகாதசி அன்று அனைத்து பெருமாள் ஆலயங்களிலும் விசேஷ பூஜைகள் நடைபெறும்.
நவதிருப்பதிகளில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். பூலோக வைகுண்டம்
என்று போற்றப்படும் ஸ்ரீரங்கத்தில் அதிகாலை பரமபத வாசல் எனும் சொர்க்க
வாசலுக்கு பெருமாள் எழுந்தருளி அருள்பாலிப்பார்.
108 திவ்ய
தேசங்களில் ஒன்றான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் மார்கழி மாதம்
முழுவதும் உற்சவங்களும், பஜனைகளும் சிறப்பாக நடைபெறும். பரமபத வாசல் வழியாக
பார்த்தசாரதி பெருமாள் தரிசனம் தருவது மிகச் சிறப்பாகும். ராப்பத்து, பகல்
பத்து உற்சவங்களும் இங்கு பிரசித்தம். வைகுண்ட ஏகாதசியில் பரமபத நாதனை
தரிசித்து இல்லாதோர், இயலாதோர், பார்வையற்றோர், தொழு நோயாளிகளுக்கு உணவு,
உடை, போர்வை தானம் செய்து சகல வளங்களும் நலங்களும் பெறுவோம்.
- ஜோதிட முரசு மிதுனம் செல்வம்
எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து செல்லும். வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உயர்வு பெறும் நாள்.