search-icon-img
featured-img

2, 11, 20, 29

Published :

6.11.2025 முதல் 12.11.2025 வரை

நல்ல எண்ணங்களை மனதில் வளர்த்து பார் புகழ பணி செய்திடும் இரண்டாம் எண் அன்பர்களே! இந்த வாரம் புகழைப் பெறுவதற்கு எந்த செலவையும் செய்ய உங்கள் மனம் துணிந்து விடும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு பதிலளிக்க முடியாமல் தவிப்பார்கள். பெண்கள், உறவினர்களை நன்கு உபசரிப்பதின் காரணமாக குடும்ப பாச புத்தகங்களை வலுப்பெற செய்வார்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். அரசியல் துறையினருக்கு சாதகமான காலகட்டம் இது. மாணவர்கள் தங்கள் படிப்பில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்: பெருமாள் கோயிலில் துளசி மாலைசார்த்தி வழிபட துன்பங்கள் விலகி இன்பம் பெறுவீர்கள்.