10.9.2026 முதல் 16.9.2026 வரை
உயர்வான எண்ணங்களுடன் நேர்மையாக வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கும் மூன்றாம் எண் அன்பர்களே, இந்த வாரம் எதிர்பார்த்த நல்ல செயல்கள் நடக்கும். தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிச்சுமை குறைந்து காணப்படுவார்கள். பெண்களுக்கு உங்களது காரியங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும். மாணவர்களுக்கு பாடங்களை படிக்க வேண்டுமே என்ற கவலை குறையும். கலைத்துறையினர் மறைமுக போட்டிகளால் நெருக்கடிகளைச் சந்திக்கலாம். அரசியல் துறையினர் சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள்.
பரிகாரம்: வியாழக்கிழமை அன்று மஞ்சள் பொடியால் சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட நினைத்த காரியங்கள் நடந்தேறும்.


