4.6.2026 முதல் 10.6.2026 வரை
மற்றவர் செய்த நன்றியை மறக்காமல் தக்க நேரத்தில் அவர்களுக்கு உதவும் குணம் ஐந்தாம் எண் வாசகர்களே, எதையும் ஒரு முறைக்கு இருமுறை நன்கு யோசித்து செய்வது வெற்றியை தரும். குடும்பம் தொடர்பான காரியங்களை பொறுப்பாக செய்வது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நல்லது. பெண்களுக்கு எந்த ஒரு வேலையையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து அதன்பிறகு அதில் ஈடுபடுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான அலைச்சல் உண்டாகலாம். ஆசிரியர் ஆலோசனைப்படி எதையும் செய்வது எதிர்காலத்துக்கு நன்மை தரும்.
பரிகாரம்: புதன்கிழமைகளில் துளசி மாலையை பெருமாளுக்கு அர்ப்பணித்து வலம் வரவும்.


