13.11.2025 முதல் 19.11.2025 வரை
இந்த வாரம் எதிர்ப்புகள் அகலும். பகை விலகி எதிலும் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். குடும்பத்தில் இருந்த மன வருத்தங்கள் மாறி சுமுகமான நிலை உண்டாகும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். பெண்களுக்கு எதிர்ப்புகள் விலகும். கலைத்துறையினருக்கு பேச்சு திறமையால் காரியங்களை சாதகமாக செய்து முடிப்பீர்கள். அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த காரியங்கள் தடைகளின்றி முடியும். மாணவர்களுக்கு போட்டிகள் குறையும். கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமையன்று ஆஞ்சனேயரை வெண்ணெய் சாற்றி வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.


