6.11.2025 முதல் 12.11.2025 வரை
நியாய வழியில் உதவி புரிந்திடும் ஏழாம் எண் அன்பர்களே, இந்த வாரம் உங்கள் வெற்றி ஒவ்வொன்றுக்கும் உங்கள் நற்செயல்கள் உறுதுணையாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு சாதகமாகவே இருக்கும். தொழில் சார்ந்த வகையில் உள்ள சிரமங்களை தவிர்க்க, புதிய யுக்திகளை செயல்படுத்துவீர்கள். பெண்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கலைத்துறையினர் தொழில் வாய்ப்புகள் பெற்று வருமானம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் மக்களுக்கு தேவையானவற்றை பெற்றுத்தர எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். மாணவர்கள் தங்கள் படிப்பில் அதி தீவிரமாக லட்சிய மனப் பான்மையுடன் படித்து புதிய சாதனை நிகழ்த்துவார்கள்.
பரிகாரம்: ஆஞ்ச நேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவதால் அனுகூலம் உண்டாகும்.


