6.11.2025 முதல் 12.11.2025 வரை
பிறர் போற்றலையும், தூற்றலையும் பொருட்படுத்தாது இருக்கும் எட்டாம் எண் அன்பர்களே, இந்த வாரம் உங்களுடைய பொது நலப்பணிகள் மேலோங்கி உங்களுக்கு உயரிய அந்தஸ்து கிடைக்கும். குடும்பத்தில் தாயின் மன உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படுவது நற்பலனைத் தரும். தொழிலில் சுக சவுகரிய வாழ்க்கையை பெறும் வகையில் தொழில் அமையும். பெண்கள் குடும்பத்தில் சகல தேவைகளையும் மனநிறைவுடன் பூர்த்தி செய்வார்கள். கலைத்துறையினர் சக கலைஞர்களிடம் நிதானத்தை கடை பிடிப்பது நன்மை தரும். அரசியல் துறையினருக்கு தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. மாணவர்கள் தங்கள் படிப்பில் முழுமன ஈடுபாட்டுடன் செயல்படும் சூழ்நிலைகள் உள்ளது.
பரிகாரம்: நடராஜர் சந்நதியில் உள்ள பதஞ்சலி மகரிஷியை உரிய முறையில் வழிபடுவதால் நலமுடன் வாழலாம்.


