14.4.24 முதல் 20.4.24 வரை
திறமையான செயல்களால் புகழும், அந்தஸ்தும் உயரும். பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்கள் எல்லாம் கை கூடும் பயணங்கள் ஏற்படலாம். ஆன்மீக பணிகளில் நாட்டம் செல்லும். உங்களது பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் கூடுதலாக பணியாற்ற வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. புதிய பதவிகள் தொடர்பான விஷயங்கள் தாமதப்பட்டாலும் பொறுப்புகள் அதிகரிக்கும். பெண்களுக்கு எடுத்த காரியங்களில் சாதகமான பலன் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு பழைய பாக்கிகள் வசூலாகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். மாணவர்களுக்கு நன் மதிப்பை பெறுவதுடன் பாடங்களில் இருக்கும் சந்தேகங்களையும் போக்கிக் கொள்வ.
பரிகாரம்: நவக்கிரக சுக்கிரனை வணங்க எல்லா பிரச்னைகளிலும் சாதகமான பலன் கிடைக்கும்.