(10.7.2025 முதல் 16.7.2025 வரை)
சாதகங்கள்: அனேகமாக எல்லா கிரகங்களும் சாதகமாகவே இருப்பது தீமைகளைக் குறைத்து நன்மைகளை அதிகரிக்கும். குரு மூன்றாம் இடத்தில் இருந்து சில ஆரோக்கிய குறைபாடுகளைத் தந்தாலும், அவருடைய பார்வை 7,9 ஸ்தானங்களில் விழுவதால், குடும்ப உறவுகள் சுமுகமாக இருக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். கூட்டுத் தொழில் சிறக்கும். நீங்கள் விரும்பிய காரியங்கள் நிறைவேறும். 2ல் சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், ஆடை ஆபரணப் பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. வருமானம் சிக்கல் இல்லாமல் இருக்கும். கொடுக்கல் வாங்கல்களில் பிரச்னை இருக்காது. சனி ராகுவுடன் சேர்ந்து லாபஸ்தானத்தில் இருப்பதால், மேலதிகாரிகள் ஒத்துழைப்பு உண்டு. எதிர்பார்த்த பதவி உயர்வு இப்போது உள்ள சாதகமான சூழ்நிலையில் முயற்சித்தால் கிடைக்கும்.
கவனம் தேவை: 4ல் புதன் அமர்ந்திருப்பதால் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள் மருத்துவம் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கும். ரத்த அழுத்தம், இதய நோய் பிரச்னை உள்ளவர்களுக்கு நோயின் உபாதை சற்று தீவிரமாகும். அலட்சியம் வேண்டாம்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை விநாயகப் பெருமானை வணங்குங்கள். வேதனைகள் மாறும்.