(12.6.2025 முதல் 18.6.2025 வரை)
சாதகங்கள்: இதுவரை ஜன்ம ராசியில் நீசம் பெற்ற செவ்வாய் இரண்டாம் இடத்தில் கேதுவோடு இணைந்து இருக்கின்றார். பல கிரகங்கள் சாதகமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். குரு சூரியன் புதன் என எல்லோரும் 12-ஆம் இடத்தில் இருப்பது, பிரச்னைகளைக் குறிக்கிறது. அதே நேரம் குருவின் பார்வை சுகஸ்தானத்திலும், ஆறாம் இடத்திலும் ஒன்பதாம் இடத்தில் விழுவதால், சற்று முயற்சியும் நிதானமும் கடைப் பிடித்தால் கஷ்டங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
கவனம் தேவை: அஷ்டமச் சனி, அஷ்டம ராகு மற்றும் செவ்வாயின் பார்வை என பல கிரக நிலைகள் அனுகூலமற்று இருப்பதால், எதையும் பரபரப்போடு செய்ய வேண்டாம். புதிய முயற்சிகளைச் சற்று தள்ளிப் போடுங்கள். மற்றவர்களைப் பற்றித் தேவையில்லாத விமர்சனங்களைச் செய்து மாட்டிக் கொள்ள வேண்டாம். ஆரோக்கியத்தில் சிறிய வித்தியாசம் இருந்தாலும் உடனடியாக மருத்துவரிடம் சென்று நிவாரணம் தேடிக் கொள்ளுங்கள். உங்கள் பிரச்னைகளை மற்றவர்களிடம் விவாதிக்க வேண்டாம்.
சந்திராஷ்டமம்: 16.6.2025 பகல் 1.11 முதல் 18.6.2025 மாலை 6.35 வரை சந்திராஷ்டமம் உண்டு. பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதி வாதங்களில் ஈடுபடவேண்டாம்.
பரிகாரம்: வயதானவர்களுக்கு உதவி செய்யவும். பகவான் நரசிம்மரை மாலை பிரதோஷ காலத்தில் வழிபடுங்கள்.