(10.7.2025 முதல் 16.7.2025 வரை)
சாதகங்கள்: 10ல் சுக்கிரன் ஆட்சி பெற்றிருக்கிறார். அவர் ஒரு சுபகிரகம். அதைப் போலவே லாபஸ்தானத்தில் குரு அமர்ந்து சூரியனோடு யோகம் தரும் நிலையில் இருக்கிறார். ராசிக்குரிய சூரியன் பதினொன்றாம் இடத்தில் அற்புதமாக அமர்ந்திருக்கிறார். எனவே இந்த வாரம் கிரகங்களால் சிரமங்கள் ஏற்படுவதற்கு வழி இல்லை. 7ல் அமர்ந்த கிரகங்கள் சிரமத்தைத் தந்தாலும் குறைவாகவே இருக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். சேமிப்புக்கும் வழி உண்டு. கலைஞர்களுக்கு நல் வாய்ப்புகள் கிடைக்கும். திருமணம் முதலிய சுப
முயற்சிகளுக்கு அனுகூலமான காலம்.
கவனம் தேவை: விரயஸ்தானத்தில் புதன் இருக்கிறார். செலவுகள் சற்று அதிகரிக்கும். தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ளவர்கள் சில சங்கடங்களைச் சமாளிக்க வேண்டி இருக்கும். ஏழாம் இடத்தில் சனி ராகு, ராசியில் கேது செவ்வாய் என நான்கு கிரகங்கள் ஒன்றை ஒன்று பார்த்துக் கொள்வதாலும் சேர்ந்து கொள்வதாலும், நட்பு மற்றும் இல்லற வாழ்க்கையில் சில மனக்கசப்புகளும் சங்கடங்களும் நேரலாம். குறிப்பாக கணவனாக இருந்தால் மனைவிக்கும், மனைவியாக இருந்தால் கணவனுக்கும் உடல் நலக்குறைவு ஏற்படலாம்.
சந்திராஷ்டமம்: 15.7.2025 இரவு 11.59 முதல் 18.7.2025 காலை 3.39 வரை சந்திராஷ்டமம் உண்டு. பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதி வாதங்களில் ஈடுபடவேண்டாம்.
பரிகாரம்: சனியின் தோஷங்கள் குறைய, அனுமன் கோயிலுக்குச் செல்லுங்கள். அனுமன் சாலிசா படியுங்கள்.