(19.6.2025 முதல் 25.6.2025 வரை)
சாதகங்கள்: இரண்டில் சுக்கிரன். நான்கில் புதன் குரு. புதன் ஆட்சி. ஆறில் செவ்வாய் இருப்பது நல்ல அமைப்பு. பக்தி விஷயங்கள் அதிகரிக்கும். கோயில் குளம் என்று தரிசனம் செய்யும் வாய்ப்புண்டு. இரண்டாம் இடத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருப்பதால், பொருளாதாரப் பிரச்னைகள் சிக்கல் இல்லாமல் இருக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். தரவேண்டிய கடன்களில் ஒரு பகுதி அடைப்படும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். தொழிலில் சிக்கல்கள் இருந்தாலும் குரு ஜீவன ஸ்தானத்தைப் பார்ப்பதால், பெரிய பாதிப்பு இருக்காது. கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
கவனம் தேவை: இரவு தூங்க வேண்டும் என்று நினைத்தாலும் ஏதோ ஒரு எண்ணம் தூக்கத்தை வரவிடாமல் செய்யும். காரணம் 12ல் ராகு, சனி இணைந்து இருக்கின்றார்கள். சில தவறான எண்ணங்கள் மனதில் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவச் செலவுகள் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்காது. சுபகாரியங்களில் திடீர்த் தடைகள் ஏற்பட்டு மன சஞ்சலத்தை அதிகரிக்கும். கவனக்குறைவு வேண்டாம்.
பரிகாரம்: ராசி நாதனை பலப்படுத்த வேண்டும். பெரியவர்களுடைய ஆசிர்வாதமும் குலதெய்வ வழிபாடும் உதவும்.