(10.7.2025 முதல் 16.7.2025 வரை)
சாதகங்கள்: நேர்மறையாக வரும் பலன்களைவிட மறைமுகமாக வரும் நன்மைகள் இந்த வார கிரக அமைப்புக்களால் ஏற்படும். ஆறாம் இடத்தில் உள்ள சனி ராகு இணைப்பு சில எதிர்பாராத நன்மைகளைத் தரும். பாக்கிய ஸ்தானத்தில் சொந்த வீடு ஆட்சி என பலத்தோடு சுக்கிரன் இருப்பதால், பண வரவு தாராளமாக இருக்கும். அதோடு, குருவும் ஐந்தாம் பார்வையாக குடும்பஸ்தானத்தைப் பார்க்கிறார். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் குறைந்து மனமகிழ்ச்சி அதிகரிக்கும். இல்லத்தில் இன்பம் ஓங்கும். பதினொன்றில் புதன் அமர்ந்திருப்பதால், விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். 10ல் சூரியன் குருவோடு இணைந்து இருப்பதால், அரசாங்க உதவிகள் விண்ணப்பித்தவர்களுக்கு சாதகமான அமைப்புண்டு.
கவனம் தேவை: 12ல் விரயம் தரக்கூடிய கேது செவ்வாய் இணைந்து இருக்கிறார்கள். மனதில் குழப்பம் ஏற்படும். தைரியக் குறைவு வரும். இதை இப்படி செய்திருக்கக் கூடாதோ என்று நினைப்பீர்கள். மருத்துவச் செலவுகள் சற்று அதிகரிக்கும். 10ல் குரு இருப்பதால், முதலீடுகளை அதிகப்படுத்த வேண்டாம். சனி வக்ரம் பெற்றிருப்பதால் உறவினர்களோடு கருத்து முரண்பாடுகள் ஏற்படும். மன அமைதி கெடும்.
பரிகாரம்: விநாயகரையும், வராகப் பெருமாளையும் வணங்குங்கள். கேது
செவ்வாயினால் ஏற்படும் தோஷங்கள் குறையும்.