(4.6.2026 முதல் 10.6.2026 வரை)
சாதகங்கள்: ராசிநாதன் செவ்வாய் ராசியிலேயே ஆட்சி பலத்தோடு அமர்ந்திருக்கிறார் 11-ல் ராகு நான்காம் இடத்தில் பாக்கிய அதிபதி குரு உச்சம். செவ்வாய் வலுவாக இருப்பதால் எதையும் துணிச்சலோடு செய்யும் ஆற்றலைப் பெறுவீர்கள். தைரியம் அதிகரிக்கும். வாரத்தின் கடைசி நாட்களில் சந்திரன் உங்கள் ராசிக்கு வருவதால் புதிய திட்டங்களைத் தொடங்கும் வாய்ப்பு ஏற்படும். சுறுசுறுப்பாகச் செயல்பட்டு தேங்கிய வேலைகளை முடிப்பீர்கள். குடும்ப விஷயங்கள் கவனம் அதிகரிக்கும். வீடு, சொத்து, தாயார் தொடர்பான பேச்சுக்கள் நடக்கலாம். உங்கள் கருத்துக்கு மேலதிகாரிகள் மதிப்பு தருவார்கள். பொருளாதாரத்தில் உயர்வு உண்டு.
கவனம்தேவை: அவசரத்தையும் கோபத்தையும் தவிர்க்கவும். அர்த்தாஷ்டம குரு, ராசியில் செவ்வாயும், இரண்டாம் இடத்தில் சூரியன் இருப்பதையும் மறந்து விட வேண்டாம். டக்கென்று எடுத்தெறிந்து பேசி விடுவீர்கள். கட்டுப்படுத்திக் கொள்ளவும். விரய ஸ்தானத்தில் சனி இருப்பதை கவனத்தில் கொள்ளுங்கள். ஆரோக்கிய விஷயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும். இடைத் தரகர்களை நம்ப வேண்டாம். சுப காரியப் பேச்சுக்களில் தடைகள் ஏற்படும்.
பரிகாரம்: ஆனைமுகனை வணங்குங்கள். யானைபலம் கிடைக்கும்.


