(6.11.2025 முதல் 12.11.2025 வரை)
சாதகங்கள்:. ஐந்துக்குரிய செவ்வாய் ஐந்தாம் இடத்தில் பலம் பெற்று இருப்பது சிறப்பான பலன்களைத் . தரும்.. புண்ணிய ஸ்தானம் பலமடைந்து இருக்கிறது இது மற்ற தீமையான பலன்களை தடுத்து விடும். அதோடு அவருடைய பார்வை ஐந்து ஏழு ஒன்பதால் இடத்தில விழுவதால் ரியல் எஸ்டேட் முதலிய தொழில்களும் சாதகமாக நடைபெறும். குரு ஜென்ம ராசியில் இருந்தாலும் அவருடைய பார்வை நிச்சயமாக பலனை விருத்தி செய்து நன்மையைத் தரும், அந்த அடிப்படையில் குருவும் செவ்வாயும் பார்ப்பதால் எதிர்பாராத சந்தர்ப்பங்கள் கிடைக்கும், நம்பிக்கை வெற்றி பெறும், சொத்துக்கள் வீடுகள் வாங்கும் யோகம் கிடைக்கும். நான்காம் இடத்தில் சுக்கிரன் புதன் நல்ல நிலையில் இருப்பதால் அதுவும் சுக்கிரன் ஆட்சியாக இருப்பதால், நற்பலன்கள் உண்டு.
கவனம் தேவை: சூரியன் நீச கதியில் இருப்பதால் சில காரியங்கள் முயற்சி எடுத்தாலும் தாமதமாகும். பிறரை நம்பி எந்த காரியத்தையும் ஒப்படைக்க வேண்டாம். நட்பை முறித்துக் கொள்வார்கள். அரசாங்க விரோதம் வரும் என்பதால் தவறான கருத்தைப் பரப்பாதீர்கள். கவனமாக செயல்படவும். அலைச்சல் அதிகரிக்கும். பயணங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
பரிகாரம்: குலதெய்வ தரிசனத்தை விட வேண்டாம்.


