search-icon-img
featured-img

மகரம்

Published :

(6.11.2025 முதல் 12.11.2025 வரை)

சாதகங்கள்: சுகாதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் ஆட்சியில் இருப்பது நல்ல அமைப்பு. வீடு கட்டுவதில் இருந்த சிரமம் குறையும். சிலர் புதிய வீடு வாங்கலாம். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். குரு ராசியைப் பார்ப்பதும், செவ்வாயைப் பார்ப்பதும் சிறந்த அமைப்பு. பத்தாம் இடத்தில் சூரியனும் புதனும் இணைந்து நல்ல யோகத்தைச் செய்கிறார்கள். பத்தாம் இடத்து அதிபதி ஆட்சி பெற்றிருக்கிறார். அதனால் சூரியனுடைய நீசம் பங்கம் ஆகிறது. தடைபட்டிருந்த காரியங்கள் வேகம் நடக்கும். துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எதிர்பார்த்திருந்த வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இடம், பூமி விற்பனையால் லாபம் உண்டு.

கவனம்தேவை: அஷ்டமத்தில் கேது இருப்பதாலும், இரண்டாம் இடத்தில் ராகு பகவான் இருப்பதாலும், தாம்பத்திய உறவில் சில குழப்பங்களும் நெருடல்களும் ஏற்படலாம். சனி வக்கிரகதியில் இருப்பதால், திடீர் செலவுகளும், எதிர்பார்த்ததை விட கூடுதல் செலவுகளும் ஏற்படும். உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து பழகவும். ஈகோ பிரச்னையைக் கைவிடவும்.

பரிகாரம்: சனிக்கிழமை தோறும் மாலையில் ஓர் கூடுதல் அகல் விளக்கு ஏற்றி வைத்து பிரார்த்தனை செய்யவும்.