search-icon-img
featured-img

மிதுனம்

Published :

(6.11.2025 முதல் 12.11.2025 வரை)

சாதகங்கள்: ராசிநாதன் புதன் ஐந்தாம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். அவரோடு சூரியனும் இருக்கிறார். சூரியனும் புதனும் இணைந்த யோகம் நல்ல முறையில் செயல்படும். அதோடு ஐந்தாம் இடத்தில் சுக்கிரன் ஆட்சி பலத்தோடு இருக்கிறார். இது நல்ல அமைப்பு. எண்ணங்கள் பூர்த்தியாகும் நினைத்தது. நிறைவேறும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. மேல் அதிகாரிகள் உதவி கிடைக்கும். அரசு வழிகளில் எதிர்பார்த்த சலுகை உண்டு. குரு செவ்வாயைப் பார்ப்பதால் உத்தியோகத்தில் மாற்றம் கிடைக்கும். கடன் சுமை குறையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குரு எட்டாம் இடத்தையும் பார்ப்பதால் கஷ்டங்கள் குறையும். ஏழுக்குரிய குரு இரண்டாம் இடத்தில் உச்சம் பெற்று இருப்பதால் தம்பதிகள் அன்னியோன்யமாகவும் குடும்ப முன்னேற்றத்திற்காகவும் இணைந்து செயல்படுவர் .

கவனம் தேவை: உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெற வேண்டும். அவர்களோடு கருத்து வேறுபாடு வேண்டாம். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் பகையை வளர்த்துக் கொள்ள வேண்டாம்.

பரிகாரம்: பெருமாளையும் தாயாரையும் வணங்கி வாருங்கள்.