search-icon-img
featured-img

சிம்மம்

Published :

(13.8.2026 முதல் 19.8.2026 வரை)

சாதகங்கள்: வாரத்தின் மத்தியில் ராசியிலேயே ராசிநாதன் ஆட்சி பெறுவது ஆத்ம பலத்தையும் தன்னம்பிக்கையையும் முயற்சியையும் அதிகரிக்கும். சரியான பாதையில் நீங்கள் செல்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். காரணம் உங்கள் பாதை மாறுவதற்கான வாய்ப்புகளும் உண்டு. எனவே முயற்சியில் உறுதியை கைவிட வேண்டாம். எதையும் ஆழமாக திட்டமிட்டுச் செய்யுங்கள். பணியிடத்தில் உங்கள் முயற்சியும் திறமையும் அங்கீகரிக்கப்படும். சமூக அந்தஸ்து அதிகரிக்கும். நட்பு வட்டம் விரியும். படைப்பாற்றல் துறையில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தேடி விண்ணப்பித்திருப்பவர்களுக்கு நேர்காணல் அழைப்புகள் கிடைக்கும்.

கவனம் தேவை: ராசிக்கு இரண்டாம் இடத்தில் தொழில் ஸ்தான அதிபதி நீசம் அடைந்திருப்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். தொழிலில் அல்லது உத்தியோகத்தில் எத்தகைய சிறு அசம்பாவிதமும் நடந்து விடாமல் கவனத்தோடு இருக்க வேண்டிய வாரம் இது. உணவுகளில் கவனம் தேவை. அகாலத்தில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். ஜீரணக் கோளாறுகள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.

பரிகாரம்: தினமும் காலை உங்கள் உள்ளங்கையில் கொஞ்சம் தண்ணீரை எடுத்து சூரிய பகவானுக்கு அர்ப்பணித்து வணங்குங்கள்.