search-icon-img
featured-img

துலாம்

Published :

(6.11.2025 முதல் 12.11.2025 வரை)

சாதகங்கள்: பத்தாம் இடத்தில் குரு உச்சமடைந்து இரண்டாம் இடத்தில் உள்ள செவ்வாயைப் பார்ப்பது முதல் சிறப்பு. இரண்டாவதாக ராசிநாதன் ராசியில் ஆட்சி பெற்றிருப்பது ராசிக்கு பலம். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் முயற்சிகள் பலனளிக்கும். வீடு பூமி வாங்கும் யோகம் உண்டு. சிலர் வீடுகளை புதுப்பிக்கலாம். மனதில் உற்சாகம் இருக்கும். சகோதரர்களால் சகாயம் உண்டு. பொருளாதாரம் சீராக இருக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு அகலும். ராசிநாதன் ஏழாம் இடத்தைப் பார்ப்பதால் கணவன் மனைவி உறவுகள் அன்னியோன்யமாக இருக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

கவனம் தேவை: பத்தாம் இடத்தில் குரு அதிசாரமாக இருப்பதால், சிலருக்கு பதவி மாற்றங்களும் இடமாற்றங்களும் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ள சிலருக்கு மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். சுபகாரியங்களில் சற்று தாமதம் நிகழலாம். சூரியன் ராசியில் இருப்பதால் ஆரோக்கிய பிரச்னைகள் ஏற்படலாம். வாக்கு ஸ்தானத்தில் ஆட்சி பெற்ற கிரகமான செவ்வாய் வலுவாக இருப்பதால், பேச்சில் மிகுந்த கவனம் தேவை.

சந்திராஷ்டமம்: 6.11.2025, காலை 11.48 முதல் 8.11.2025 காலை 11.14 வரை சந்திராஷ்டமம் உண்டு. பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

பரிகாரம்: ராம பக்த ஆஞ்சநேயனை வணங்குவதன் மூலம் சகல நன்மைகளும் உண்டு.