(6.11.2025 முதல் 12.11.2025 வரை)
சாதகங்கள்: தன குடும்பாதிபதி செவ்வாய் வலிமையாக பாக்கிய ஸ்தானத்தில் இருக்கிறார். ராசிநாதன் குரு உச்சம் பெற்றிருக்கிறார். இந்த இரண்டு அமைப்புகளும் மீன ராசி நேயர்களுக்கு நன்மை செய்யும் அமைப்புகள். ராசிநாதன் குரு ராசியைப் பார்ப்பதால், ராசி பலப்படுகிறது. அதனால் சிரமங்களைத் தாங்கும் வலிமை கிடைக்கிறது. எப்படி கஷ்டங்களில் இருந்து தப்பிக்கலாம் என்ற தெளிவு பிறப்பதால் அதிகம் துன்பப்பட மாட்டீர்கள். குருவே ஒரு வழியைக் காட்டி விடுவார். செவ்வாய் பலமாக இருப்பதால் சகோதர உறவுகள் நல்லபடியாக உதவும். கடன் சுமை குறையும். ஊர் மாற்றம் விரும்பியபடி இருக்கும். திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். வீட்டில் சுபகாரிய நிகழ்வுகள் நடைபெறும்.
கவனம் தேவை: விரய ஸ்தானம் பலப்பட்டு இருப்பதால் தேவையில்லாத செலவுகள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கும். சேமிப்புக்கு வழி இருக்காது. ஓய்வும் தூக்கமும் எட்டாத கனியாக இருக்கலாம். அதனால் ஆரோக்கியம் குறைந்து டென்ஷன் ஏற்படலாம். கவனச் சிதறலால், மனம் கலக்கத்திற்கு ஆளாகலாம். கவனம் தேவை. அது ஒன்றே வழி.
பரிகாரம்: அன்னதானம் செய்பவர்களுக்கு உதவுங்கள் அல்லது நீங்களே
செய்யுங்கள். அனைத்தும் நலமாகும்.


