search-icon-img
featured-img

விருச்சிகம்

Published :

3.9.2026 முதல் 9.9.2026 வரை

சாதகங்கள்: ராசிநாதன் செவ்வாய் எட்டாம் இடத்தில் இருப்பதால் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டாலும், ஆராய்ச்சி, ரகசிய விஷயங்கள், காப்பீடு, வாரிசு சொத்து போன்ற விஷயங்களில் எதிர்பாராத நன்மைகள் கிடைக்கலாம். பாக்கிய ஸ்தானத்தில் குரு இருப்பது மிகச் சிறந்த நிலை. நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த காரியங்கள் நடக்கலாம். அதிகாரிகளின் கவனம் உங்கள் மீது திரும்பும். பதினொன்றாம் இடத்தில் புதன் இருப்பதால் லாபம் கிடைக்கும். தொழில் தொடர்புகள் மூலம் வருமானம் அதிகரிக்கும். பன்னிரண்டாம் இடத்தில் சுக்கிரன் இருப்பதால் வெளிநாடு, வெளியூர் தொடர்பான வாய்ப்புகள் வரலாம். இந்த வாரம் பாக்கியமும்

தொழிலும் கைகொடுக்கும்.

கவனம்தேவை: எட்டாம் இடத்தில் செவ்வாய் இருப்பதால் உடல்நலம் மற்றும் பயணங்களில் கவனம் தேவை. அவசரமாக வாகனம் ஓட்ட வேண்டாம். பத்தாம் இடத்தில் சூரியனுடன் கேது இருப்பதால் திடீரென்று வேலை மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் வரலாம். நான்காம் இடத்தில் ராகு இருப்பதால் வீட்டு அமைதி பாதிக்கப்படலாம். பிள்ளைகள் விஷயத்தில் கூடுதல் அக்கறை தேவை.

சந்திராஷ்டமம்: 5.9.2026 காலை 10.18 முதல் 7.9.2026 பகல் 12.38 வரை சந்திராஷ்டமம் உண்டு. பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதி வாதங்களில் ஈடுபட வேண்டாம்.

பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வணங்குங்கள் நலம் கிடைக்கும்.