search-icon-img
featured-img

ரிஷபம்

Published :

3.9.2026 முதல் 9.9.2026 வரை

சாதகங்கள்: இரண்டாம் இடத்தில் செவ்வாய் இருப்பது பொருளாதார விஷயங்களில் வேகத்தைத் தரும். பணவரவு இருக்கும். பேச்சில் தைரியம் பிறக்கும். குடும்ப விஷயங்களில் முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். கன்னியில் இருக்கும் புதன் ஐந்தாம் இடத்தில் இருப்பதால் கல்வி, புத்திசாலித்தனம், பிள்ளைகள் விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சிந்திக்கும் திறன் அதிகரிக்கும். ஆறாம் இடத்தில் சுக்கிரன் இருப்பது வேலை பார்க்கிறவர்களுக்கு சாதகமான நிலை. பத்தாம் இடத்தில் ராகு இருப்பதால் தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். புதிய தொழில் நுட்பம், புதிய தொடர்புகள் மூலம் முன்னேற்றம் ஏற்படும்.

கவனம் தேவை: நான்காம் இடத்தில் சூரியனுடன் கேது இருப்பதால் தாயார் உடல்நிலை, வீடு, வாகனம் சம்பந்தமான விஷயங்களில் கவனம் தேவை. இரண்டாம் இடத்து செவ்வாய் இருப்பதால் பேசும்போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். குடும்பத்தில் தேவையில்லாத வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். பதினொன்றில் பத்தாம் இடத்தில் ராகு தொழிலில் திடீர் மாற்றங்களையும் கொடுக்கலாம். அவசர முடிவுகளை எடுக்காமல் நிதானமாக செயல்படுவது நல்லது.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் அருகாமையில் உள்ள கோயிலில் ஒரு விளக்கு போடுங்கள். பிரார்த்தனை செய்யுங்கள்.