search-icon-img
featured-img

கன்னி

Published :

3.9.2026 முதல் 9.9.2026 வரை

சாதகங்கள்: ராசிநாதன் புதன் ராசியிலேயே இருப்பது மிகச் சிறந்த நிலை. சிந்திக்கும் திறன் அதிகரிக்கும். பேச்சிலும் செயலிலும் தெளிவு இருக்கும். முக்கியமான முடிவுகளை எடுக்க முடியும். பத்தாம் இடத்தில் செவ்வாய் இருப்பதால் தொழிலில் வேகம் அதிகரிக்கும். புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். பதினொன்றாம் இடத்தில் குரு இருப்பது லாபத்திற்கு மிகவும் நல்லது. எதிர்பார்த்த பணம் கிடைக்கும். இரண்டாம் இடத்தில் சுக்கிரன் இருப்பதால் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆறாம் இடத்தில் ராகு இருப்பதால் எதிரிகளை வெல்ல முடியும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். இந்த வாரம் உங்களுக்கு முன்னேற்றமான வாரமாக இருக்கும்.

கவனம் தேவை: பன்னிரண்டாம் இடத்தில் சூரியனும் கேதுவும் இருப்பதால் செலவுகள் அதிகரிக்கலாம். மனதில் தேவையில்லாத குழப்பம் ஏற்படலாம். ஏழாம் இடத்தில் வக்கிர சனி இருப்பதால் கணவன் மனைவி உறவில் சிறு கருத்து வேறுபாடுகள் வரலாம். கூட்டுத் தொழில் செய்பவர்கள் ஆவணங்கள் மற்றும் கணக்கு விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பத்தாம் இடத்தில் செவ்வாய் இருப்பதால் கோபத்தில் முடிவு எடுக்கக்கூடாது. உடல் சோர்வு ஏற்படலாம். ஓய்வுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும்.

பரிகாரம்: பெருமாளையும் தாயாரையும் துளசி மாலை சாற்றி வணங்கி வலம் வரவும்.