அசுவினி
29.10.2019 முதல் 15.11.2020 வரை
கிரக நிலை: குரு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு பதினெட்டாவது நட்சத்திரத்திலிருந்து பத்தொன்பதாவது நட்சத்திரத்திற்கு மாறுகிறார்.
பலன்: எப்போதும் எதைப் பற்றியாவது சிந்தித்துக் கொண்டே இருக்கும் அசுவனி நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே! உங்கள் மீது மற்றவர்கள் கோபப்படமுடியாத அளவு நடந்து கொள்வீர்கள். இந்த குரு பெயர்ச்சியில் மனக்கவலை குறையும். பணவரவு இருக்கும். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வீண்பழி நீங்கும். சில்லறை சண்டைகள் சரியாகும்.
தொழில் வியாபாரம் சற்று மந்தமாக காணப்பட்டாலும் பணம் வருவது தடைபடாது. பார்ட்னர்கள் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு இருந்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பால் அது குறையும்.
குடும்பத்தில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல் நீங்கும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றி சிந்தனை மேலோங்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.
பெண்களுக்கு அக்கம்பக்கத்தினருடன் இருந்து வந்த மனவருத்தங்கள் நீங்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.
கலைத்துறையினர் மற்றவர்கள் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.
அரசியல்வாதிகள் கோபத்தை தவிர்ப்பது நன்மை தரும்.
மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை குறையும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள்.
பரிகாரம்: குலதெய்வத்தை பூஜித்து வணங்க குடும்ப பிரச்னை தீரும். கடன் கட்டுக்குள் இருக்கும்.