பூரம்
29.10.2019 முதல் 15.11.2020 வரை
கிரகநிலை: குரு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு எட்டாவது நட்சத்திரத்திலிருந்து ஒன்பதாவது நட்சத்திரத்திற்கு மாறுகிறார்.
பலன்: திட்டமிட்டு செயல்பட்டு எதிலும் வெற்றி பெறும் பூரம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே, நீங்கள் செய்தொழிலில் முன்னேற்றம் காண கடுமையாக உழைப்பவர். இந்த குரு பெயர்ச்சியில் காரியதாமதம் ஏற்படக்கூடும். வீண் பிரச்னைகள் ஏற்படும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நன்மை தரும். ஏற்கனவே பாதியில் நின்ற பணிகள் நடக்கும். விருப்பத்திற்கு மாறாக சில காரியங்கள் நடக்கலாம்.
தொழில் வியாபாரத்தில் தொய்வு காணப்படும். விட்ட இடத்தை பிடிக்க பாடுபட வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு வீண் அலைச்சல் இருக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்திற்காக வாக்குவாதம் செய்து அமைதியை குறைப்பார்கள். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். கவனம் தேவை. பிள்ளைகளிடம் அன்பாகப் பேசிப் பழகுவது நல்லது.
பெண்கள் பாதியில் நின்ற காரியங்களை விரைவாக செய்து முடிப்பீர்கள்.
கலைத்துறையினருக்கு பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்படும்.
அரசியல்வாதிகளுக்கு சொல்வாக்கு செல்வாக்கு உயரும்.
மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற நீண்ட நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி வரும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் ஸ்ரீஆஞ்சநேய பகவானை வெண்ணெய் சாத்தி வழிபட்டு வர கடினமான பணிகளும் எளிதாகும். மனோ தைரியம் அதிகரிக்கும்.