உத்திரம்
29.10.2019 முதல் 15.11.2020 வரை
கிரகநிலை: குரு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு ஏழாவது நட்சத்திரத்திலிருந்து எட்டாவது நட்சத்திரத்திற்கு மாறுகிறார்.
பலன்: முன்யோசனை இல்லாமல் எதிலும் ஈடுபட்டாலும் சிக்கலில் மாட்டாமல் நழுவிவிடும் சாமர்த்தியம் மிக்க உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே, நீங்கள் கேளிக்கையில் ஈடுபாடு உடையவர். இந்த குரு பெயர்ச்சியில் பல யோகங்கள் உண்டாகும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். புத்திசாதூரியத்தால் எந்த தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். எந்த ஒரு பிரச்னையையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கண்மூடித்தனமாக எதையும் செய்யாமல் விழிப்புடன் இருப்பது லாபம் அதிகரிக்கச் செய்யும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே இதமான உறவு காணப்படும். பிள்ளைகள் மூலம் நன்மை உண்டாகும் அவர்களது செயல்களால் பெருமை கிடைக்கும்.
பெண்கள் எந்த ஒரு வேலையையும் விரைவாகவும், திறமையாகவும் செய்து முடிப்பீர்கள்.
கலைத்துறையினருக்கு அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும்.
அரசியல்வாதிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். விழிப்புடன் செயல்படுவது நல்லது.
பரிகாரம்: ஸ்ரீராகவேந்திரரை பூஜித்து வணங்க எல்லா காரியங்களும் அனுகூலமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும்.