சுவாதி
29.10.2019 முதல் 15.11.2020 வரை
கிரகநிலை: குரு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு நான்காவது நட்சத்திரத்திலிருந்து ஐந்தாவது நட்சத்திரத்திற்கு மாறுகிறார்.
பலன்: யானையை பூனையாக்குவதும், பூனையை யானையாக்குவதும் என்பது போல எந்த விஷயத்திலும் சின்னதை பெரியதாகவும், பெரியதை சிறியதாகவும் மாற்றும் கலையை அறிந்த சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே, இந்த குரு பெயர்ச்சியில் தேவையான உதவிகள் கிடைக்கும். பண வரத்து அதிகரிக்கும். வீண் அலைச்சல் ஏற்படும். உழைப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். பயணங்களால் வீண் செலவு உண்டாகும்.
தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.
குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாகப் பேசிப் பழகுவது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம்.
பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.
கலைத்துறையினருக்கு வீண் அலைச்சல் நீங்கும்.
அரசியல்வாதிகள் எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நல்லது.
மாணவர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.
பரிகாரம்: புதன்கிழமையில் மாரியம்மனை தரிசித்து அர்ச்சனை செய்ய எல்லா நலனும் உண்டாகும்.